siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இலங்கைக்கு விண்ணிலிருந்து விழும் மர்மப்பொருளால் ஆபத்து இல்லை?

நவம்பர் 13ம் திகதி விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப் பொருளினால் இலங்கைக்கு எந்த ஆபத்தோ, சேதமோ ஏற்படாது என்று கலாநிதி சந்தன ஜெயரத்ன  தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் மூத்த விரிவுரையாளரும், ஆர்தர் சி கிளார்க் மையத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்துறை ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜெயரத்ன இதுகுறித்து மேலும் தகவல் வெளியிடுகையில், வானில் இருந்து விழும் பொருள் பெரும்பாலும் வெடித்து, புவி மேற்பரப்பை...

புதன், 28 அக்டோபர், 2015

தொலைக்காட்சி திருட்டில் திருடர்கள் சிக்கினர்

 மல்லாகம் ரயில் நிலைய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து தொலைக்காட்சியைத் திருடிய 4 சந்தேகநபர்களை, நேற்று கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வீட்டில் கடந்த 23ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.  இது தொடர்பில் குறித்த வீட்டைக் கண்காணிக்கும் பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு  செய்துள்ளார். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார்...

வீடு ஒன்றில் பட்டப்பகலில் கொள்ளையர்களினால் திருட்டு

சுன்னாகம் kks வீதி கொத்தியாலடி சந்தியில் உள்ள வீடு ஒன்றில் கூரை வழியாக சென்று கொள்ளை இடம்பெற்றுள்ளது. இவ் வீட்டில் தம்பதிகள் வேலைக்கு சென்ற வேளையில் இந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளனர்.வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த திருடன் வீட்டில் இருந்த பெரும் மதிப்புள்ள கணணியை களவாடி வீட்டின் கதவை திறந்து சென்றுள்ளான். மாலை வேலை முடிந்து வீடுதிரும்பிய தம்பதியினர் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் சுன்னாகம் பொலிசாருக்கு...

சில பகுதிகள் யாழ்- கண்டி ஏ9 வீதியின் உடைவு!

யாழ்ப்பாணம் கண்டிவரையான ஏ-9 வீதியின், கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான வீதியில் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  பிரதேசத்தில் பெய்யும் அதிக மழையுடன் கூடிய காலநிலையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளிலும் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்குகம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்கள் அதிகரித்த...

சரணாலயத்தில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்???

யால வனவிலங்கு சரணாலயத்தில் வெளிநாட்டுப் பணிப் பெண் ஒருவர் திடீரென மரணித்துள்ளதாக திஸ்ஸமஹாரம பொலிஸார் தெரிவிக்கின்றனர். யால வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது குறித்த வெளிநாட்டுப் பெண் திடீரென சுகவீன முற்றுள்ளார். சுகவீனமுற்ற பெண் திஸ்ஸமஹாரம தெபரவௌல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிந்தவர் சீனப் பெண் எனவும் கடந்த 24ம் திகதி அவர்  இலங்கைக்கு  வந்துள்ளார் எனவும் பொலிஸார்...

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பொலிஸிற்கு திருடனை பிடிக்க உதவிய சிறுவன்!!!

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. இக்கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய  நபரை பொலிசார் தேடியவேளை திருட்டுப்போன கடைக்கு அருகாமையில் வசித்துவரும் 12 வயது சிறுவனான இ.கிருசாந்தன் வவுனியா பொலிசாருக்கு சந்தேக நபர் வாய்பேச முடியாதவர் என்ற தகவலை வழங்கியதையடுத்து பொலிசார் சந்தேக நபரை வவுனியா பேரூந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை  கைது...

திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழரின் ஒரு கையில் வாளுடன் பெண்ணுக்கு தாலி கட்டு

ஐரோப்பாவில் வன்முறைகளும் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசங்களும் அதிகரித்து வருவதற்கு அண்மையில் ஜேர்மனி முன்சனில் நடந்த திருமணம் உதாரணமாக அமைந்தது. வாள் வெட்டு அடிதடி வன்முறைகளில் ஈடுபடுவதை ஒரு உயர்ந்த தகமையாக கருதும் போக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களிடையே வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. திருமணத்தின் போதும் மாப்பிள்ளையை அழைத்து செல்லும் போதும் மாப்பிள்ளை கையில் வாழுடன் சென்றதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வாளுடன் சென்ற மாப்பிள்ளை...

சனி, 24 அக்டோபர், 2015

மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் விபத்துக்குள்ளனர்

யாழ்பாணம் கே.கே.எஸ் வீதியில் இரவு 18.50 அளவில் இணுவில் பகுதியில் இச் சம்வம் இடம்பெற்றுள்ளது. சுன்னாகத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மஞ்சள் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவருடன் மோதி வீதியின் எதிர் பக்கமாக உள்ள (50m) துரத்தில் கடைகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இறுதியாக மின்சார கம்பத்துடன் மோதியது. இதில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது....

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை  பெற்றிருந்தார். மனோரமா...