வவுனியா பூந்தோட்டம் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. இக்கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய
நபரை பொலிசார் தேடியவேளை திருட்டுப்போன கடைக்கு அருகாமையில் வசித்துவரும் 12 வயது சிறுவனான இ.கிருசாந்தன் வவுனியா பொலிசாருக்கு சந்தேக நபர் வாய்பேச முடியாதவர் என்ற தகவலை வழங்கியதையடுத்து பொலிசார் சந்தேக நபரை வவுனியா பேரூந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை
கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் வாய்பேசமாட்டாதவன். அவனிடம் சிறப்பாக சைகை மொழியில் பேசியே தகவல்களை பெறவேண்டியிருந்தது. பொலிசாரின் விசாரணைகளில் முழுமையாக தகவல்களை பெறமுடியாது போக 12 வயது சிறுவனாகிய கிருசாந்தனின் உதவையை
நாடினர் பொலிசார். அவனது தாயும், தந்தையும் பேசமாட்டாதவர்கள் என்பதால் சைகை மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான் கிருசாந்தன். இதனால் அவன் பொலிஸ் விசாரணைக்கு பெரிதும் உதவினான். இதனையடுத்து வவுனியா பொலிசார் சிறுவனை பாராட்டியதுடன் இச்சிறுவனுக்கு விருதுக்கு பரிந்துரை செய்யவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த
கிருசாந்தன்:
மரவேலை செய்யும் பட்டறையுடன் கூடிய தங்கள் வீட்டுக்கு வந்த வாய்பேசமாட்டாத இளைஞன் ஒருவன் தனது தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்ததாகவும் அதன்பின் அவனது செயற்பாடுகளில் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டதினால். இருவரும் அவனைப்
பின்தொடர்ந்து
தேடிய போது பூந்தோட்டம் சந்தியில் உள்ள ஒரு கடை ஒன்றின் பின்புறமாக குறித்த இளைஞன் படுத்திருந்துள்ளான் என தெரிவித்த சிறுவன் விடிந்ததும் பார்த்த போது அவன் படுத்திருந்த கடைக்கு அருகிலுள்ள கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை தெரியவந்தது
என தெரிவித்தான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக