
எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
யாழ் அச்சுவேலி மேற்கு தென்மூலை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற சண்டையில், கீழே வீழ்ந்து தேவராஜா மனோரம்மா (வயது 41)...