வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள காணியற்றவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டம் கீரிமலையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் அவற்றில் 50 வீடுகளுக்கு மின்சார விநியோகம் விரைவில் வழ ங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் இவ்வீடுகள் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.இதில் 140 வீடுகளின் பணி ஏறத்தாழ பூர்த்தியா கும் நிலையை எட்டியுள்ளது.
இதில் 50 வீடுகளுக்கு விரைவில் மின்சார விநியோகம் வழங்கப்படும் என்பதையே மின்சார சபை உறுதிப்படுத்தி இருக்கின்றது.
மின்சாரக் கம்பங்களை நடும் பணி ஆரம்பித்து விட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் குறிக்கப்பட்ட 50 வீடுகளுக்கும் மின்சார விநியோகம் ஆரம்பித்து விடும் என்று தெரிவிக்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக