siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 4 டிசம்பர், 2017

நாட்டில் காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

வரும் காலங்களில் நிலவும் காலநிலை குறித்து, ஊடகங்களின் ஊடாக வௌியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
விஷேடமாக மண்சரிவு குறித்த அறிக்கைகளை அவதானித்து, அதில் கூறப்பட்டுள்ளவாறு செயற்படுமாறு, அவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு பூராகவும் அதிக மழையுடனான காலநிலை நிலவலாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
இதேவேளை, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய
 வாய்ப்பு  உள்ளது.
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியிலும் நீடிப்பதாக அவர் நேற்று 
தெரிவித்தார்.
இது அடுத்த வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். டிசம்பர் 7ம் திகதி வரையிலான கால கட்டத்தில் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
அத்துடன், மீனவர்கள் வரும் 5ம் திகதி முதல் தெற்கு ஆந்திரா, வடதமிழகத்தின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக