*47615 மேல் அடிப்படை சம்பளம்(ஏனைய படிகளை விடுத்து)
*வருடாந்தம் 1335 சம்பள ஏற்றம்
*6 வருடத்தில் தரமுயர்வு
*15,000 – 50000 பல்துறை முகாமை கொடுப்பனவு அனுமதிக்கப்படவுள்ளது
*தொலைபேசி கட்டணங்கள் 5000
*விசேட நிறைவேற்றுதர கொடுப்பனவு 3000-15000
*ஒவ்வொரு திணைக்களத்திற்கேற்ப விசேட கொடுப்பனவுகள்
*விடுமுறை நாள் கொடுப்பனவுகள்
*சிகப்பு நிற விசேட வெளிநாட்டு ராஜகாரி கடவுச்சீட்டு
*சமூக மற்றும் அரச துறைகளில் முன்வரிசை கௌரவம்
*தரம் 1 ஆனதும் வாகனம் ஒன்று சாரதி சகிதம்
*தரம் 1 ஆகும்வரை குழும வாகனத்தை நாளாந்தம் 100 கி.
மீ வரை பயன்படுத்த அனுமதி
*6 வருடத்தில் 36 இலட்சம் பெறுமதியான வரிக்கழிவுட
ன் வாகன அனுமதி பத்திரம்
*தங்குமிடம் அல்லது விடுதி அல்லது வாசஸ்தல வசதிகள். அல்லது அதற்கான கொடுப்பனவு
*வெளிநாட்டு சுற்றுப்பயண வசதிகள்
*அரச செலவில் அல்லது வெளிநாட்டு புலமைப் பரிசில் அடிப்படையில் விரும்பிய நாட்டில் முதுமானி கற்கை வசதி
*பொலிஸ் SP மற்றும் இராணுவ லெப்டினென்ட் கேனலுக்கு சமமான தரம்
*இலங்கையில் உள்ள மிக முக்கியமான அரச திணைக்களங்களின் தலைமை உட்பட அமைச்சுக்கள், ஜனாதிபதி செயலாளர்
வரை உயம் வாய்ப்புஇவை அனைத்தையும் விட நீங்கள் உங்கள் நாட்டில் சமூகத்தில் தூய அக்கறை மிக்கவராயின், உங்கள் சிந்தையில் உள்ள திட்டங்களை உங்கள் மட்டத்தில் அதிகாரத்திற்குட்பட்டு செயற்படுத்தவும், தேவையுடைய மக்களை நாடி நேசக்கரம் நீட்டவும் மகத்தான வாய்ப்பு…!
ஆசைப்படுகிறீர்களா?….ஆர்வம் வருகிறதா?
பல்கலைக்கழக செமஸ்ரர் பரீட்சைக்கு தயாராவது போன்றல்லாது, உங்களிடம் உள்ள அதீத திறன்களை பல்துறை சார்பில் மெருகூட்டுங்கள். அதற்காக ஒவ்வொரு மணித்துளியையும் பொன்னான நேரமாகப் பாவித்து, தேடல், வாசிப்பு, பயிற்சி, அனுபவஸ்தர்களுடன், உரையாடல், போன்றவற்றில் தியாகம் செய்யுங்கள்.
விண்ணப்பித்து விட வேண்டாம். இதனை நகைச்சுவையாக கருதுபவர்கள் தயவுசெய்து விண்ணப்பிக்க எண்ணாதீர்கள்…!
இது SLAS..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக