siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 12 பிப்ரவரி, 2014

நாஜி கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு !

 ஜேர்மனியில் நாஜி கால கலைப்படைப்புகளில் 60 ஓவியங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சி நடைபெற்று வந்த போது, 1930- 40 ஆண்டு காலகட்டத்தில் ஹில்டிபிரான்ட் குர்லிட் என்பவர் கலைப்படைப்புகளை விற்பனை செய்து வந்தார்.
அப்போது அரசு அதிகாரிகள், யூதர்களிடமிருந்து திருடிய மற்றும் சிதைந்ததாக கருதிய ஓவியங்களை இவரிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் காலப்போக்கில் விற்பனையாகாமல் இவரிடமே இருந்த இவ்வோவியங்கள் தற்போது இவரது மகன் கோர்னிலியஸ் குர்லிட் வசித்துவரும் மியூனிச் வீட்டில் இருப்பது கலைப்பொருள் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு வந்தது.

இதனைதொடர்ந்து ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் வீட்டில் பிக்காசோ, ரெனோயர், மோனெட் போன்ற பழம்பெரும் ஓவியர்களின் 60 கலைப்படைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோர்னிலியசின் தகவல் தொடர்பாளர் ஸ்டீபன் ஹோல்சிங்கர் தெரிவித்துள்ளார்.

இது யூதர்களிடமிருந்து திருடப்பட்ட கலைப்பொருட்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு திருடப்பட்டதாய் இருந்தால் உரியவர்களிடம் கலைப்பொருட்கள் திருப்பி கொடுக்கப்படும் என ஜேர்மனி அரசு குறிப்பிட்டுள்ளது.
                           

0 கருத்துகள்:

கருத்துரையிடுக