சில வகை பாம்புகளால் 100 அடி உயரம் வரை பறக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஆசிய காடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பாம்புகள் தமது தட்டையாக்கிக் கொண்டும் உடலை நீட்டிக்கொண்டும் பறக்கும் தன்மையைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சில பாம்புகள் 100 அடி உயரமான மரங்களிலிருந்தும் தாவுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வேர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜெக் சோச்சா தலைமையிலான குழுவினர் பாம்புகளால் எவ்வாறு பறக்க முடிகிறது என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
மும்பரிமாண (3டி) அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட பாம்புகளின் தன்மையைக்கொண்ட உருளைகளை வைத்து பல ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டனர். தட்டையான உடலமைப்புடன் சில கோணங்களில் இருக்கும்போது பாம்புகள் காற்றில் மிதக்கும் ஆற்றலைப் பெறுகின்றன என இக்குழுவினர் கூறுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக