யாழ்ப்பாணம், திக்கம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்படவுள்ள ஊர்வலத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ள நிலையினில் சுன்னாகம் நீதிமன்றமோ இதே காரணத்திற்கான
போராட்டத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுன்னாகம் பகுதியில் எதிர்ப்பு ஊர்வலமொன்றை நடத்த ஏற்பாடாகியிருந்தது. இந் நிலையிலேயே, பாதுகாப்பு காரணம் கொண்டு அவ்வூர்வலத்தை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றினில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய மல்லாகம் நீதவான் தடை உத்தரவு விதித்து கட்டளை பிறப்பித்துள்ளார்.
எனினும் இதே போன்று பருத்தித்துறை நீதிமன்றினில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த நீதிபதி 'ஜனநாயக நாட்டில் ஊர்வலம் நடத்துவதற்கு அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அந்த ஊர்வலத்தில் வன்முறைகள் அசம்பாவிதங்கள் ஏற்படாமலும் அரசாங்க உடமைகளுக்கும் பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படாமல் பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனக்கூறி தடை உத்தரவு பிறப்பிக்க
மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக