கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலை பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. காட்டுப்பகுதிக்குச் சென்றவர்கள் சிலர் சடலத்தை
கண்டு அக்கராயன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தைப் பார்வையிட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.பொதுமக்களால் சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர். முன்று பிள்ளைகளின் தந்தையான நா.பரமேஸ்வரன் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேறந்கொண்டுன்னளர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக