கிளிநொச்சியில் மக்களை ஏமாற்றும் போலி ஆசாமிகள் பலர் தங்களது கைவண்ணத்தினை காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நாகரிகமான முறையில் ஆடை அணிந்து தமது பேச்சுத்திறமை மூலம் மக்களை ஏமாற்றி வருவது
அவதானிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் தான் தன் பணப்பை தொலைந்தது. இதனால் வீடு செல்ல சிறிதளவு பணம் தேவைப்படுகின்றது எனக்கூறி பேருந்து தரிப்பிடங்களில் மக்களை ஏமாற்றி பணம் பெற்று
வருகின்றனர்.
அத்துடன் கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பொது இடங்களிலும் இந்த நாகரிக திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக