முறிகண்டியில் இடம்பெற்ற இவ் வீதி விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,
அக்கரைப்பற்றில் இருந்து யாழ். நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மல்லாவியில் இருந்து கீரிமலை சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை ஏழு மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் வைத்து முந்திச்செல்ல எத்தனித்த வேளையே இவ் விபத்து
இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பத்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்கலாக பதின்நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக