கிளிநொச்சியில் பிரபல வர்த்தகர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணசாமி திவாகரன் என்ற வர்த்தகரே அசிட் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வைத்து குறித்த வர்த்தகர் மீது மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களே அசிட் வீசிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடலில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான வர்த்தகர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக