நாட்டில் .கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் இருவரும் காயமடைந்த நிலையில், வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பின்னால் பயணித்தவர் முதலில் வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டார்.
இறந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து டனோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக