சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கையை இன்று மாலை 3 மணிக்கு முன்னெடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.
நாட்டி தெரிவு செய்யப்பட்ட 14 கரையோர பிரதேசங்களில் இந்த ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மத்திய நிலையத்தின் ஊடகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் லால் குமார தெரிவித்தார்.
சுனாமி பேரலை உருவாகுமாயின் அதன் போது செயற்படும் விதம் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாகவும் சுனாமி ஒத்திகை நடவடிக்கைகள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், தேவையற்ற பதற்ற நிலைமையை தவிர்த்துக் கொள்ளும் முகமாகவே இந்த செய்திகுறிப்பு வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக