களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கன்னங்கர விடுதியினுள் நுழைந்த கும்பலொன்று மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளது.
இதன்போது விடுதியின் ஜன்னல்கள்,கதவுகள், மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள், கண்ணாடிகள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.
இத் தாக்குதலால் எவரும் காயங்களுக்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக