நாட்டில் தற்போதைய வரட்சி காரணமாக முப்பத்தேழாயிரம் ஏக்கருக்கும் அதிகமான (37,101) நெற்செய்கைகள் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 32,967. குருநாகல் மாவட்டத்தில் அதிகளவில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் 19,388 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நெல் சேதங்களை மதிப்பிடுவதற்கு 25 மதிப்பீட்டுக் குழுக்களை நியமித்துள்ளார்.
தீவு முழுவதையும் உள்ளடக்கிய பயிர் சேதங்களை மதிப்பிடும் பணியிலும் குழு ஈடுபட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகிறது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் காப்பீட்டு வாரியத் தலைவர் டபிள்யூ. எம். பி. வீரசேகர அவர்களின் தலைமையில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பயிர் சேதம் தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாய அமைச்சர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதன்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக