siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 9 செப்டம்பர், 2013

விற்பனையில் களைகட்டிய பிள்ளையார் சிலைகள்


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பிள்ளையார் சிலைகள், தோரணங்கள் மற்றும் பூஜை சாமான்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
முழுமுதல் கடவுள் விநாயகப்பெருமானின்
சதுர்த்தி விழாஇன்று கொண்டாடப்படுகிறது.
                                                                                                                               
   இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று  அதிகாலை 4 மணியிலிருந்து சிறப்பு தரிசன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் வீடுகளில் சிறிய களிமண் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். சென்னையில் கொசப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்

களிமண் விநாயகர் பிள்ளையார் சிலைகள் ஏராளமாக செய்யப்பட்டன.
இந்த சிலைகள் கோயம்பேடு மார்க்கெட், பூக்கடை, பாரிமுனை, மயிலை, போன்ற இடங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டில் இந்த பிள்ளையார் சிலைகள் அதன் உயரத்துக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டன.

இந்த ஆண்டு இவை ரூ.75ல் தொடங்கி ரூ.400 வரை விற்கப்படுகிறது. அதே போல, வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் 5 அடி முதல் 18 அடி வரையான உயரங்களில் விற்கப்படுகின்றன.

இவை ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.40 ஆயிரம் வரையான விலையில் விற்கப்படுகின்றன. நகைக் கடைகளில் நவரத்தின விநாயகர் சிலைகள் லட்சக்கணக்கான ரூபாயில் விற்கப்படுகின்றன.
பிள்ளையாருக்கு பயன்படுத்தும் குடைகள் சிலைகளின் உயரத்துக்கு ஏற்ற வகையில் விற்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் ரூ.10க்கு கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.15ல் தொடங்கி ரூ.50 வரை விற்கப்படுகிறது.

இது தவிர கரும்பு ஒரு கட்டு (15 கழிகள்) ரூ.300 க்கு விற்கப்படுகிறது.
மாவிலை மற்றும் தோரணம் ஒரு ஜோடி அடங்கியது ரூ.30க்கும், பொரி, அவல், கடலை, சர்க்கரை கலந்து ஒரு லிட்டர் ரூ.30க்கும் விற்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் முறையாக ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, சாத்துக்குடி, விளாம்பழம், சோளம், கம்பு, இலந்தை பழம் ஆகியவை அடங்கிய ஒரு பேக்கிங் ரூ.100க்கு விற்கப்படுகிறது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக