யாழ்.மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் சுமார் 9 பவுண் தங்க நகைகளை திருடிச்
சென்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளதாக சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
மீசாலை வடக்கு–பூதவராயர் கோவிலை அண்மித்த பகுதியில் தனிமையில் வாழும் பெண் ஒருவர் பாதுகாப்பு கருதி உறவினர் ஒருவரின் வீட்டில் இரவில் உறங்குவதற்கு சென்றுள்ளார்.
குறித்த சம்பவத்தை அவதானித்த கொள்ளை கும்பல் அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் வீட்டை உடைத்து உட்புகுந்து சுமார் 9 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதுடன்,வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராவின் சேமிப்பு தொகுதியும் துாக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக