siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 டிசம்பர், 2015

மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா  வழங்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்.  வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு...

செவ்வாய், 22 டிசம்பர், 2015

நான் முன்பே வாக்குக் கொடுத்திட்டேன்???

தாய்: ஏண்டி சேஷலூ குட்டி அவன் சாயபு ஆச்சுதேடி அவன்கிட்டே என்னடி ரகசியம் பேசுறே. மகள்: இல்லே அம்மா நான் சின்னக் குழந்தையா இருக்கச்சே வீதியிலே விளையாண்டிருந்தப்போ மணலிலே ஒரு வீடு கட்டினேன். அதை வந்து இந்த அடுத்த ஆத்து சுக்கூர் இடிக்க வந்தான். நான் இடிக்காதடா என்று சொன்னேன், அப்படியானால் என்னைக் கட்டிக்கிறாயா என்று கேட்டான், நானு வீடு இடிந்துபோமேன்னு ஆகட்டுமென்று சொல்லிட்டேன். அதை இத்தனை நாள் மனசிலே வெச்சிண்டிருந்து இப்ப வந்து கேக்கராண்டி. தாய்:...

சனி, 19 டிசம்பர், 2015

இலவச தொலைபேசிகள் ஊடகவியலாளர்களுக்கு?

நாட்டிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவச ஸ்மார்ட் தொலைபேசிகளை வழங்கும் திட்டம் ஒன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அடுத்த வருடம்...

புதன், 16 டிசம்பர், 2015

கார் விபத்தில் இருவர் உடல் நசுங்கிப் பலியாகினர்

கொழும்பின் புறநகர் கந்தானை கப்புவத்த பிரதேசத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற ரயில் - கார் விபத்தில் இருவர் உடல் நசுங்கிப் பலியாகினர். ரயில் கடவையைக் கடக்க முயன்ற கார் ஒன்று ரயிலுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பங்கதெனியவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி ரயிலுடன் பட்டுகமையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் கப்புவத்தை புகையிரத கடவைக்கு அருகில் வைத்து மோதியதால் காரில்  பயணித்த இருவர்  பலியாகினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில்...

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இதோ டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

மெக்ஸிக்கோவில் உலகிலேயே முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Aedes aegypti மற்றும் Aedes albopictus எனும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலானது சளி, இருமல், என சாதாரண அறிகுறிகளாக ஆரம்பித்து இறுதியில் உயிரையே பறிக்கும் அபாயம்  கொண்டதாகும். ‘ஸனோஃபி’ என்ற பிரான்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் டெங்கு நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு, ‘டெங்வாக்ஸியா’ எனப்படும் தடுப்பூசியை...

வியாழன், 10 டிசம்பர், 2015

மணப்பெண்ணிற்கு வழக்கமாகஅம்மாஅறிவுரை கூறுவார் மாறாக தந்தை???

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை : வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா? செல்லமே! அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்.. 1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன்,...

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சிறுபோகத்தை நிறுத்துவதால் ,2,500 மில்லியன் நட்டம்!!!

அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்துவதால், கிளிநொச்சி விவசாய சமூகத்துக்கு 2,500 மில்லியன் நட்டம் ஏற்படும். கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். எனினும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாம் அதற்கு சம்மதிப்பதாகவும் வாழ்வாதரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் சி.சிவமோகன் தெரிவித்தார். அடுத்த வருடத்துக்கான சிறுபோக செய்கையை நிறுத்துவது தொடர்பான கூட்டம், மாவட்ட செயலக...

திங்கள், 7 டிசம்பர், 2015

பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!

இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த மூன்று வருட கால வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது. தேயிலை வர்த்தக அறிக்கை ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பன இதற்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்து சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்த மொத்த தேயிலை உற்பத்தி, 26.7 மில்லியன் கிலோவாக பதிவாகி  இருந்தது. ஜனவரியில் இருந்து ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 279.8 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி...

வியாழன், 3 டிசம்பர், 2015

இருவர்.குளாய் கிணற்றுக்குள் மூச்சுத் திணறிபலி!!!

யாழ் உடுப்பிட்டி பகுதியில் குளாய் கிணற்றுக்குள் ஏற்பட்ட பழுது பார்ப்பதற்கு இறங்கிய 2 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். புலோலி பகுதியினைச் சேர்ந்த மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையினைச் சேர்ந்த கிருஸ்னமூர்த்தி (வயது 61) ஆகிய இருவருமே  இச் சம்பவத்தில்  உயிரிளந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படிப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளாய் கிணற்று மோட்டர் பழுது பட்டுள்ளது....