கொழும்பின் புறநகர் கந்தானை கப்புவத்த பிரதேசத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற ரயில் - கார் விபத்தில் இருவர் உடல் நசுங்கிப் பலியாகினர்.
ரயில் கடவையைக் கடக்க முயன்ற கார் ஒன்று ரயிலுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பங்கதெனியவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி ரயிலுடன் பட்டுகமையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் கப்புவத்தை புகையிரத கடவைக்கு அருகில் வைத்து மோதியதால் காரில்
பயணித்த இருவர்
பலியாகினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மினுவாங்கொடையைச் சேர்ந்த நிமல் ராஜபக்ஷ பண்டார (வயது 42) என்ற கார் சாரதியும் ஜா - எலையைச் சேர்ந்த பெட்றிக் அருணோத் கனகப்பெருமாள் (வயது 24) என்ற இளைஞரும் பலியாகியுள்ளனர் என்று கந்னைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக