பணம் இருந்தால் மட்டும் போதாது, அதனைக் கொண்டு பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.
பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்களை கடவுளுக்கு இணையானவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
குஜராத் மாநிலத்தின் மெக்னசா என்ற சிறு கிராமத்தில் உள்ள அங்கன்வாடிக்கு செல்லும் கிம்ஜிபாய் என்ற முதியவர், அங்கு படித்துவரும் குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகள் பேனா, பென்சில்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுப்பது வழக்கம்.
இந்த முறை அங்கன்வாடிக்கு சென்ற முதியவர், தங்கத்தோடு வாங்கிக்கொண்டு சென்றுள்ளார், அந்த தங்கத்தோட்டினை 10 குழந்தைகளுக்கு அன்போடு வழங்கியுள்ளார்.
இவர், அங்கு செல்வதற்கு முன்பாக 10 குழந்தைகளை தெரிவு செய்துவைக்குமாறு அங்கிருக்கும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார், அதன்படியே தெரிவு செய்யப்பட்டிருந்த அந்த குழந்தைகளுக்கு தங்கத்தோட்டினை வழங்கியுள்ளார்.
இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் செல்வந்தர் கிடையாது, பிச்சை எடுப்பதில் கிடைக்கும் பணத்தினை வைத்து கடந்த 13 ஆண்டுகளாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
இந்நபரின் உதவி மனப்பான்மையை புரிந்துகொண்டு, நகைக்கடைக்காரரும் ரூ.13 ஆயிரம் மதிக்கத்தக்க தங்கத்தோட்டின் விலையை 3 ஆயிரமாக குறைத்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை
செய்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக