சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்தது தொடர்பான விடயத்தில் வடமாகாண சபையால் பொறுப்புக்கூற வேண்டியதில்லை என விவசாய அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக ஆய்வு அறிக்கை வெளியிட்டது ஏன் என மல்லாகம் நீதிமன்றம் கேள்வி
எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தண்ணீரில் எண்ணெய் கலந்தது தொடர்பான வழக்கு நீதிவான் ஏ.ஜுட்சன் முன்னிலையில் நேற்று முன்தினம் மல்லாகத்தில் இடம்பெற்றது. கடந்த தவணையின்போது நேற்றுமுன்தினம்
ஆஜராகவேண்டிய விவசாய துறை
அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நீதிமன்றில் சமூகமளிக்கவில்லை. அமைச்சர் சார்பாக உத்தியோகத்தர் ஒருவர் சமூகமளித்தமை தொடர்பாக அதனை ஏற்க மறுத்து நீதிமன்று உத்தியோகத்தரை எச்சரிக்கை செய்ததுடன் ஐங்கரநேசனுக்கு பிடியாணை பிறப்பிக்கவுள்ளதாகவும்
தெரிவித்தது.
இதன்போது ஐங்கரநேசன் சார்பில் சட்டத்தரணி வரதராசா முன்னிலையானார். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் வழங்கவேண்டிய கடப்பாடு வடமாகாண சபைக்கு இல்லை. அது மத்திய அரசின் பொறுப்பு.
மனிதாபிமான அடிப்படையில் தான் வடமாகாண சபை வழங்கியது என்று சட்டத்தரணி வரதராசா தெரிவித்தமை தொடர்பாக நீதிமன்று கேள்வி
எழுப்பியுள்ளது.
மத்திய அரசு பொறுப்பு என்றால் எதற்காக நிபுணர்களை நியமித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்? அதனை ஏன் வெளிப்படுத்தினர்? இதற்கான பதில்களை அடுத்த தவணையில் விவசாய அமைச்சர் நீதிமன்றில் நேரில் தெளிவுபடுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு அன்றைய தினம் விவசாய அமைச்சர் மற்றும் நீர்வளச் சபையின் பொறு-ப்ப-திகாரி இருவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தர விடப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக