அம்பியூலன்ஸ் சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுகாதார சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே தாம் இதனைக் கருதுவதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பியூலன்ஸ் சேவையை இந்தியாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதன் ஊடாக இந்த தனியார் மயப்படுத்தல் திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது இலவசமாக பெற்றுக் கொள்ளப்படுகின்ற இந்த சேவை எதிர்வரும் காலங்களில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்.
இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும் என முன்னிலை சோஷலிஸக் கட்சி அழைப்பு
விடுத்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக