மூளாய், பொன்னாலைக்கான 773 ஆம் பாதை இலக்க பஸ் சேவை கடந்த 30 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.
தினமும் காலை 5.45 மணிக்கும் பிற்பகல் 2.15 மணிக்கும் பருத்தித்துறையிலிருந்தும் காலை 8 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் பொன்னாலையிலிருந்தும் இருசேவைகள் இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை இ.போ.ச. பணிமனை முகாமையாளர்
கே.கந்தசாமி
தெரிவித்தார். கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தினால் தடைப்பட்டிருந்த இச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து 30 ஆண்டு காலஇடைவெளிக்குப் பின்னர் இச் சேவை மீளவும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது
. இச்சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி பருத்தித்துறையிலிருந்து மந்திகை, நெல்லியடி, குஞ்சர் கடை, உடுப்பிட்டி, தொண்டைமானாறு, அச்சுவேலி, புத்தூர், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, மாவிட்டபுரம், கீரிமலை, சேந்தாங்குளம், விளான், பண்டத்தரிப்பு, சித்தன்கேணி, சுழிபுரம், மூளாய் ஊடாக பொன்னாலை வரை இடம்பெற்றறு,
வருகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக