யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான முறையில் வீடுகளை வைத்திருந்தவர்கள் பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளனர் 
குறித்த  எட்டு   வீட்டின் உரிமையாளர்களுக்கும் எதிராக இன்று நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான் சதீஸ்கரன் குறித்த 8 வீட்டின் உரிமையாளர்களுக்கும் தலா 1500 ருபாய் தண்டம் விதித்து 
தீர்ப்பளித்தார்.
இலங்கை பூராகவும் பரவி வரும் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெங்கு நுளம்புகள்  பரவும் அபாயமுள்ள வீடுகள் இனம் காணப்பட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு எதிராய் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் கடந்த வருடம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்  செய்திகள் >>> 








 
 
 
 
 
 
 
 
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக