யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் நந்தினி பேக்கரி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வாள்வெட்டு கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டித்தள்ளியுள்ளது.
குறித்த சம்பவம் 22.01.2017. மாலை 04.30 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள 5 வீடுகளுக்குள் புகுந்த இந்த மர்ம கும்பல், வீடுகளில் இருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடாத்திவிட்டுச் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக