வீதியில் இடம்பெறுகின்ற விபத்துக்களுக்கு சாரதிகள் மட்டும் பொருப்பல்ல..பொருப்பற்ற முறையில் வீதிகளை கடக்கின்ற பாதசாரிகளின் கவனயீனமும், அவசரப்போக்கும் பிரதான காரணமாகின்றது.
இந்நிலையில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை உங்களை சுற்றி கெமராக்கள் வலம் வரபோகின்றது. உங்களது தவறான வீதி பயன்பாடுகளை நேரடியாக ஒளிப்பரப்படவிருக்கின்றது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கையின் முக்கியமான தெருக்களில் கெமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
நீங்கள் பாதைகளில் விடும் தவறுகள், முறையற்ற நடவடிக்கைகள் என்பன நேரடியாக ஒளிப்பரப்படவிருக்கின்றது..
நோக்கம் தான் என்ன???
உயிர்ப்பலியை ஏற்படுத்தும் பாரதூரமான விபத்துக்கள் முதல், நிரந்தர அங்கவீனம் ஏற்படுத்தும் விபத்துக்கள், பொருட்சேதங்களைப் பெரியளவில் தந்து இழப்புத் தரும் விபத்துக்கள் என்று
ஒரு சில வினாடிகள் தவறு காரணமாக ஆயுளுக்கும் எம்மை மனவேதனைக்குள்ளாக்கும் விபத்துக்கள் தினமும் இலங்கையில் நடந்துகொண்டேயிருக்கின்றன.
கடந்த 2015 ல் மட்டும் நாடாளாவியரீதியில் பதியப்பட்ட விபத்துக்கள் 39719 நடந்திருக்கின்றன. இதில் 2800 உயிர்கள் பலியாகியுள்ளன.
2016 ல் ஆண்டில் சுமார் 80000 விபத்துக்கள்
பதிவாகியுள்ளன.
வீதிகள் விருத்தியடைகின்றன; வாகனங்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாய்க் குவிந்தவண்ணமே இருக்கின்றன.
வீதி போக்குவரத்து போலீசாரும் புதிதாக நூறு, ஆயிரம் என்று வீதிகள் தோறும் நிறுத்திவைக்கப்பட்டாலும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றனவே தவிர குறைவதாக இல்லை.
பொதுமக்களின் அவசரம், வீதி விதிமுறைகள் பற்றிய தெளிவின்மை, அவதானக் குறைவு, சாரதி அனுமதிப் பத்திர வழங்கல் நடைமுறையில் ஒரு சீர்த்தன்மை இல்லை, வாகன அதிகரிப்பு, வீதிகளின் குறுக்கம் இப்படி ஆய்ந்து, ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் விபத்தும் உயிர்ப்பலிகளும் அதிகரிக்கின்றனவே தவிர, குறைவதாக
இல்லை.
ஆகவே வீதி விதிமுறைகள் பற்றிய தெளிவினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த நாளைய தினம் வீதிக்கே வருகிறது .
வீதி விதிமுறைகள் பற்றிய தெளிவினையும், இதனால் ஏற்படுகின்ற விளைவுகளை கட்டுப்படுத்தவும், விலைமதிக்கமுடியாத மனித உயிர்களை காப்பாற்றவும் தயாராகிவிட்டது லங்காபுரி …
நாளை வெள்ளிக்கிழமை நீங்கள் விதியில் விடுகின்ற தவறுகளை முழு இலங்கை மட்டும் அன்றி உலகமே பார்க்கப்பபோகின்றது…
மனித உயிர்களை காப்பாற்ற, வீதி விபத்துக்களை குறைக்க கெமராக்களுடன் நாளைய தினம் இலங்கையின் அனைத்து வீதிகளிலும் நேரடியாக
இந்நடவடிக்கை தொடர்பான உங்களது ஆழமான, கருத்துக்களை கொமண்ட் செய்யவும்…
விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்ற துணிந்த உங்களது விமர்சனங்களையும் ஏற்க தயாராகிவிருக்கின்றது….
குறிப்பாக பாதசாரிகள் பாதைகளில் எப்படி கடக்க வேண்டும்?
வீதி விளக்குகளை எப்படி பின்பற்ற வேண்டும்?
சாரதிகள் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும்?
வீதி விதிமுறைகள் தொடர்பில் உங்களுக்கு தெரியாத விடங்கள் என்ன?
போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உங்களது விமர்சனங்களை கொமண்ட் செய்யவும்..
உங்களது ஒரு விமர்சனம் கூட நாளை ஒரு
உயிரை காப்பாற்றும்…
0 கருத்துகள்:
கருத்துரையிடுக