வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். சுன்னாகம் சந்தியில் இன்று பகல் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய
வருவதாவது,
காங்கேசன்துறை வீதியில் இருந்து மூவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாது பயணம் செய்துள்ளனர்.
அவர்கள் மூவரையும் கண்ட பொலிஸார் வீதியில் மறித்துள்ள போதும், அவர்கள் பொலிஸாரின் உத்தரவிற்கு கட்டுப்படாமல் தப்பிச்
சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் பொலிஸார் பின்தொடர்ந்து துரத்திக்கொண்டு சென்ற வேளையில் சுன்னாகம் சந்தியில் உள்ள சமிஞ்ஞை விளக்குப் போடப்பட்டிருந்த நிலையில் பாதையை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த வேனுடன் மோதியுள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதனால், அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக