siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

நாட்டில் பட்டா ரக வாகனம் மின் கம்பத்தில் மோதி பாரிய விபத்து

நாட்டில் மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று அதிகாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம் கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்த மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துள்குள்ளாகியுள்ளது.

பட்டா ரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். 
எனினும் குறித்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 26 பிப்ரவரி, 2026

நாட்டில் .ரத்மலானை கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

நாட்டில் ரத்மலானை கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகொன்றில் நேற்று (25) இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர். 
இறந்தவர் ரத்மலானையைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணம் சந்தேகத்திற்குரியது என்று பொலிஸார் வகைப்படுத்தியுள்ள நிலையில், கல்கிசை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுது வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 25 பிப்ரவரி, 2026

நாட்டில் .ஹொரணையில் நபர் ஒருவர் அடித்துக் கொலை

நாட்டில் ஹொரணை, பொருவதந்தவில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதுடைய ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர். 
பாதிக்கப்பட்டவர், அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று கதவுகள் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் வீட்டினுள் இருந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் நிலைமை குறித்துத் தெரிவித்தார்.
பின்னர் மனைவி சம்பவ இடத்திற்கு வந்து, மற்ற பெண்ணுடன் சேர்ந்து, மரக் கம்பத்தைப் பயன்படுத்தி அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
சம்பவம் தொடர்பில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

நாட்டில் குருநாகல் – தம்புள்ள வீதியில் பாரிய விபத்து

நாட்டில் குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியில் யக்கபிடிய சந்தியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் பாரவூர்தி சாரதி ஒருவர்
 படுகாயமடைந்துள்ளார் 
வண்டியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் வாகனக் கட்டுப்பாட்டை இழந்து வண்டியை, வீதியின் வலப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீமெந்து ஏற்றிய லொரியில் மோதியுள்ளது.
விபத்தின் தாக்கத்தில் பாரவூர்தியில் இருந்த சாரதி கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும், லொரியில் ஏற்றப்பட்டிருந்த சீமெந்து மூட்டைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

திங்கள், 23 பிப்ரவரி, 2026

.நாட்டில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

.நாட்டில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 2ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கிறது என தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
சோமாவதிய வீதி தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதான வீதிகளிலும் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது
பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஒரு ஒருங்கிணைந்த அவசர காலத் திட்டத்தை 
முன்னெடுத்துள்ளது.
மாணவர்களைப் பரீட்சை நிலையங்களுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், எவ்வித இடையூறுமின்றி பரீட்சைகளை நடத்தவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். 
எந்தவொரு அவசர நிலைமையையும் கையாளுவதற்கு முப்படைகள், பொலிஸார் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மேலதிக தகவல்களுக்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என 
அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

நாட்டில் வெவெல்தெனிய பகுதியில் விபத்தில் ய இளைஞர் உயிரிழப்பு.

நாட்டில் .கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
 கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் இருவரும் காயமடைந்த நிலையில்,   வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 காயமடைந்த பின்னால் பயணித்தவர் முதலில் வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு
 மாற்றப்பட்டார். 
 இறந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து டனோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 21 பிப்ரவரி, 2026

நாட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் கணவரால் வெட்டிக்கொலை

நாட்டில் குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை
 செய்யப்பட்டுள்ளார்.
பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதுடைய கணவர், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, ஆத்திரமடைந்த கணவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை வெட்டியுள்ளார்.
பாரிய வெட்டுக் காயங்களுக்குள்ளான அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் விசேட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

குழந்தைகளை .கனடாவில் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட தாக்கும் நிமோனியா

குழந்தைகள் கனடாவில் கடந்த ஆண்டில் நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 30 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதில் குறிப்பாக 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த வயது பிரிவில் நிமோனியா காரணமான அனுமதிகள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்குக்கும் அதிகமாக
 உயர்ந்துள்ளன.
தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் ஜெஸ்ஸி பாப்பன்பர்க், 2024–2025 சுவாச நோய் பருவம் நிமோனியா நோயாளிகளால் மிகப் பரபரப்பாக இருந்தது என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த ஆண்டின் கடுமையான காய்ச்சல் (flu) பரவல், நிமோனியா அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என
 தெரிவிக்கப்படுகின்றது. 
வைரஸ் மூலம் ஏற்படும் நிமோனியா, காய்ச்சலின் ஒரு தீவிர விளைவாக அமையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. . என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 19 பிப்ரவரி, 2026

நச்சு வாயு கசிவு காரணமாக நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் மரணம்

. நைஜீரியாவில் உள்ள சுரங்கமொன்றில் நச்சுவாயு கசிவு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈயம், சல்பர் மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்கள் திடீரென வெளிப்பட்டதால் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை கொடிய புகையை சுவாசிப்பதை உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நைஜீரிய அரசாங்கம் சுரங்க தளத்தை மூடியுள்ளதாகவும் வாயு கசிவு குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 18 பிப்ரவரி, 2026

நாட்டில் மஹியங்கனை - தியதலாவை சாலையில் விபத்து பெண் உயிரிழப்பு

நாட்டில்  மஹியங்கனை - தியதலாவை சாலையில் 48வது மைல்கல் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், ஒரு குழந்தை காயமடைந்தது என்று பொலிஸார் 
தெரிவித்தனர். 
 தியதலாவையில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, அந்தப் பெண் மற்றும் குழந்தை மீது மோதியதாக 
தெரிவிக்கப்படுகிறது. 
 காயமடைந்த இருவரும் மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், அங்கு அந்தப் பெண் 
பின்னர் உயிரிழந்தார். 
 இறந்தவர் மஹியங்கனையைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

மரண அறிவித்தல் திருமதி இரத்தினம் அழகேஸ்வரி ( கிரிசா ) 17.02.2026

துயர் பகிர்வு-தோற்றம் 02-03-1951-.மறைவு-17-02.-2026

 யாழ்   சங்கோலை  மாவிட்ட புரத்தை பிறப்பிடமா​வும் நவற்கிரியை வாழ்விட மா​கவும் தற்போது   k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர்  இரத்தினம் அழகேஸ்வரி( கிரிசா ) அவர்கள் 
 இணுவிலில் 17-02-2026.செவவாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலம்சென்ற 
 இரத்தினம் அவர்களின் அன்பு  மனைவியும்  காலம்சென்ற தம்பையா தம்பதிகளின் பாசமிகு மகளும்
காலம்சென்ற துரைராஜா பூரணம்  தம்பதிகளின் அன்பு மருமகளும் இன்பலாதா இம்பமோகன் இன்ப ரூபி 
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர் 
 அன்னாரின் இறுதிச்சடங்கு திகதி-  20-02-2026 வெள்ளிக்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
20-02-2026 வெள்ளிக்கிழமை  அன்று ;இணுவில்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
  k .k .s வீதி இனுவில்
 மேற்கு இணுவில்
https://navakkiri.blogspot.com/2024/01/8-150124.html






 

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

நாட்டில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழப்பு

நாட்டில் மாத்தறை மற்றும் தமன பகுதிகளில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர். 
 தமன பொலிஸ் பிரிவின் பாமினிகம பகுதியில், ஒரு திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில், வாகனம் ஓட்டியவரும், அதன் பின்னால் பயணித்தவரும் பலத்த காயமடைந்தனர். 
 காயமடைந்தவர்கள் 20 மற்றும் 22 வயதுடைய அக்கரைப்பற்றைச்  சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சடலங்கள் அம்பாறை மருத்துவமனையின் பிரேத அறையில் 
வைக்கப்பட்டுள்ளன, 
அதே நேரத்தில் மோதலில் காயமடைந்த லாரி ஓட்டுநர் அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 இதற்கிடையில், மாத்தறை பொலிஸ் பிரிவின் மடிஹா பகுதியில், மாத்தறை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து,
 சாலையை விட்டு விலகி, சுவரில் மோதியதாகக்
 கூறப்படுகிறது. 
 கொட்டகொடவைச் சேர்ந்த 40 வயதுடைய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

சனி, 14 பிப்ரவரி, 2026

மரண அறிவித்தல் திருமதி வேலுப்பிள்ளை இந்திராணி

துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-13-02.-2'யாழ் இருபாலையை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வதிவிடமாகவும் தற்போது கரணவாயில் வசிது வந்த  திருமதி வேலுப்பிள்ளை இந்திராணி  அவர்கள் .கரணவாயில் 13-02-2026..வெள்ளிக்கிழமை  அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார் 
திரு  வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் அமரர்  சின்னையா  தம்பதியினரின் அன்பு மருமகளும் 
    பவனி (பிரான்ஸ்) ஸ்ரீ  (பிரான்ஸ்) சசியன் (இலங்கை ) துரையன் (பிரான்ஸ்) fசுகந்தினி (கனடா )அமுதசுரபி (இலங்கை )  ஞானசுரபி  (இலங்கை ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர் 
  அன்னாரின் இறுதிச்சடங்கு திகதி-  13-02-2026 வெள்ளிக்கிழமை  அன்று    நவற்கிரியில் அவரது  இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
13-02-2026 வெள்ளிக்கிழமை  அன்று ;(முகவரி) நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்
 செய்யப்பட்டது  
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
ராசவீதி 
நவற்கிரி புத்தூர்  
தகவல்
குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com


வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

நாட்டில் வாழைச்சேனையில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு;.

நாட்டில் மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 
இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு
 வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளார்.
யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் சடலமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நகரப் பகுதிக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பெரும் 
பீதியடைந்துள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டுயானைகளை காட்டிற்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.;.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 12 பிப்ரவரி, 2026

கத்திக்குத்து தாக்குதல் .லண்டனில் ஆபத்தான நிலையில் இரு சிறுவர்கள்

கத்திக்குத்து தாக்குதல்.வடமேற்கு லண்டனில் உள்ள பாடசாலையொன்றில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டன் கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலையில் குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றது.
இதில் 13 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் தாக்கப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக 
கூறப்படுகிறது.
“சுற்றுப்புற சூழ்நிலைகள்” காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இது ஒரு பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்படவில்லை என்றும் துப்பறியும் அதிகாரி லூக் வில்லியம்ஸ் தெரிவித்தார். 
கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.




புதன், 11 பிப்ரவரி, 2026

உயர்நிலை பாடசாலையில் கனடாவில் துப்பாக்கிச்சூடு -பத்துப் பேர் பலி

 மேல்நிலை பாடசாலையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். 
அங்குள்ள உயர்நிலை பாடசாலையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும்,  அங்கிருந்து 06 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 
அத்துடன் தாக்குதல்தாரியும் இதில் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 
இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.




 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

கடும் குளிர் காரணமாக நியூயார்க்கில் பதினெட்டு பேர் உயிரிழப்பு

 கடும் குளிர் காரணமாக  அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த  குளிர் காலநிலை காரணமாக 18 பேர் 
உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் அல்லது அதற்குக் கீழே இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், வரும் நாட்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.



திங்கள், 9 பிப்ரவரி, 2026

நாட்டில் திடீரென டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து விபத்து

நாட்டில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டையிழந்து வீதியோர கால்வாயில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்துச் சம்பவம் வேளையில் கொஸ்கம சாலாவ பகுதியில்.09-02-2026. இன்று காலை , இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரியிலிருந்து பத்ரமுல்லை நோக்கி இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்களை 
ஏற்றிச் சென்ற அலுவலக பணியாளர் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. 
குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்தின் முன்புற இடது பக்க டயர் திடீரென வெடித்ததால் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 
இதனையடுத்தே சாலையோரத்தில் இருந்த கால்வாயில் விபத்திற்குள்ளாகி முன்னோக்கி சென்று நிறுத்தப்பட்டது. 
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்து கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் மூவர் பலி

 இலங்கையில்  பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒரு இளைஞன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியில் கெக்கிராவ மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய பெண் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
அம்பாறை, சியம்பளாண்டுவ வீதியில் மின்னிமரு சந்திக்கு அருகில் காய்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி, எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 
உயிரிழந்தவர் தல்கஸ்பிட்டிய, ஹபலன்காவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர். விபத்து தொடர்பாக லாரியின் ஓட்டுநர் மற்றும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் காலி-கொழும்பு பிரதான வீதியில் ரண்டோம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு இளைஞன் 
உயிரிழந்துள்ளார். 
பலப்பிட்டிய நோக்கிச் சென்ற வேன் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த 
விபத்து நிகழ்ந்துள்ளது. 
 விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்து, பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அலுத்வல
 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார். 
மேற்படி விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 7 பிப்ரவரி, 2026

நாட்டில் தித்வா சூறாவளி காரணமாக 103 குழந்தைகள் பெற்றோர் இன்றி தவிப்பு

நாட்டில் தித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் 103 குழந்தைகள் ஒரு தாய், தந்தை அல்லது இரு பெற்றோர்களையும் இழந்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் 
தெரிவித்தார். 
 பதுளை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (6) நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அவர் இந்தக் கருத்துக்களை
 தெரிவித்தார். 
 ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், இந்தக் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு பிரத்யேக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக 
அமைச்சர் பால்ராஜ் கூறினார். 
 பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்,  அவர் மேலும் கூறினார். 
 இதுபோன்ற அனைத்து ஏற்பாடுகளும் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

கிரான்ஸ்-மொன்டானா விடுதி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி

சுவிற்சர்லாந்தில் கிரான்ஸ்-மொன்டானா தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் வலைஸ் மாகாணம் முதல்க்ட்ட அவசர உதவியாக 10,000 பிராங்கை வழங்கியுள்ளது.
48 பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. “கோரப்பட்ட ஆவணங்கள் பெறப்பட்டதும் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு, பணம் செலுத்துவதற்காக வங்கிக்கு அனுப்பப்படுவதாக வலைஸ் மாகாணம் நேற்று அறிவித்துள்ளது.
செலுத்தப்பட்டுள்ள 48 கொடுப்பனவுகளில், 14 வெளிநாட்டு கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன, அவற்றில் பிரான்சில் ஏழு,
 இத்தாலியில் ஆறு மற்றும் பெல்ஜியத்தில் ஒன்று என வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 5 பிப்ரவரி, 2026

நாட்டில் கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில்

நாட்டில்   கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது. 
மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளானதில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குளவி கூட்டின் ஆபத்து குறித்தும் அதை அகற்ற வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாகம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லைஎன்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 4 பிப்ரவரி, 2026

பாலம் இடிந்து விழுந்ததில் சீனாவில் 05 தொழிலாளர்கள் மரணம்

 கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் ஒன்று சீனாவில் இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியாங்சுவில் உள்ள யான்செங்கில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மீட்புக் குழுக்களின் தொடர் முயற்சியில் 03 பேரின் சடல்கள் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவசர சேவைகள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய பனி புயல் காரணமாக வட மற்றும் தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் 
துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் 100ஐ நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

திங்கள், 2 பிப்ரவரி, 2026

இராணுவ வாகனம் மோதி யாழ். மயிலிட்டியில் முதியவர் பலி

இன்று யாழ் மயிலிட்டி பகுதியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html