siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து) உடுவில் பிரதேச செயலகத்தால் தவிர்த்திருக்கக் கூடிய மரணம்

துயர் பகிர்வு--தோற்றம்: 08.12.1989-மறைவு: 30.08.2026
திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து)(அபிவிருத்தி உத்தியோகத்தர் – உடுவில் பிரதேச செயலகம்)இல.83, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நிஷாந்தன் சிந்துபிரியா அவர்கள் கடந்த 30.08.2026 அன்று அகால மரணமடைந்தார்.
தவிர்த்திருக்கக் கூடிய மரணம்>>
உடுவில் பிரதேச செயலக உயர் அதிகாரிகளின் அசமந்த போக்கே மின்சாரம் பாய்ந்து வெளிக்கள உத்தியோகத்தர் நிஷாந்தன் சிந்துபிரியா உயிரிழக்கக் காரணம் என தற்போது விசாரணையில் 
தெரிய வந்துள்ளது.
உடுவில் பிரதேச செயலக மூலிகை தோட்டப் பகுதியில் மின்சாரக் கசிவு ஏற்கனவே இருப்பது தொடர்பில் 1 வருடத்துக்கு முன் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக
 தெரிவிக்கப்படுகிறது.  
உயர் அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ளாமல்  அதனை சீர் செய்யாத காரணத்தினால்  வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரான இரண்டு பிள்ளைகளின் தாயான நிசாந்தன் சிந்துபிரியா உயிரிழக்கக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
 உற்பத்தித்திறன் போட்டிக்கு உயரதிகாரிகள் இன்று(31) பிரதேச செயலகத்துக்கு வருகை தருகின்ற  நிலையில் நேற்றைய தினம்(30)  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குறித்த விடயம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சித்த மருத்துவ துறைக்கு பொறுப்பான குறித்த உத்தியோகத்தர் மூலிகை தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பொழுது அந்த வாயிலாக சென்ற மின்சார வயர் மற்றவர்கள் மீது தாக்கப்படும் என்பதனால் அதனை அவர் அகற்ற முற்பட்ட போது மின்சாரம் அவர் மீது பாய்ந்து உயிரிழக்க காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
 இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் 
வழங்கப்பட்டுள்ளது.
அன்னாரின்  நல்லடக்கம் சிறுப்பிட்டி இந்துமனத்தில் நல் அடக்கம் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஊழியர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 

https://navakkiri.blogspot.com/2026/08/blog-post_21.html