siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஜூன், 2026

குழந்தை கருவில் இழந்த துயரத்திலும் களமிறங்கிய காக்போ: கோலுக்குப் பின் கண்ணீர்

காக்போ: தனது குழந்தை 3 நாட்களுக்கு முன்னர் கருவிலே உயிரிழந்தநிலையில், நெதர்லாந்து வீரர் கோல் அடித்ததும் மைதானத்திலே கதறி அழுதுள்ளார். 2026 பிபா உலக கிண்ண கால்பந்து தொடரில், நெதர்லாந்து மற்றும் மொரோக்கோவிற்கு இடையேயான போட்டியில், முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. 
போட்டியின் 2ஆம் பாதியில் 72வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ(cody gakpo) ஆட்டத்தின் முதல் கோலை அடித்தன்மூலம் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. 
ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இசா தியோப், அணியின் முதல் கோலை பதிவு செய்து ஆட்டத்தினை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்தது. 
நெதர்லாந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த 
போட்டியில், நெதர்லாந்து வீரர் கோடி காக்போ 
கோல் அடித்த பின்னர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த சனிக்கிழமை கோடி காக்போவின் துணைவி நோவா வான் டெர் பிஜ்(Noa van der Bij), தங்களது குழந்தை கருவிலே
 உயிரிழந்து விட்டதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தார். இந்த சோகமான சூழலில் கோடி காக்போ அவருடயை குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அணி நிர்வாகம் விடுப்பு வழங்கியது. ஆனால், இது தனது தேசிய அணிக்கு முக்கியமான போட்டி என்பதால் கோடி காக்போ ஆட்டத்தில் கலந்து கொண்டார். 
கோடி காக்போ கோல் அடித்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுத நிலையில், வீரர்கள் சுற்றி நின்று அவருக்கு ஆதரவு வழங்கினர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டல் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இது குறித்து பேசிய நெதர்லாந்து 
கோமன், "எங்களால் இயன்றவரை அவருக்கு ஆதரவளித்து வருகிறோம். 
நிச்சயமாக, முதல் சில நாட்களுக்கு அவர் தனது 
குடும்பத்தினரிடம் சென்று அவர்களுடன் இருப்பதற்கு சுதந்திரம் இருந்தது. ஆனால் 'நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன், நான் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்' என்று அவர் ஒரு கணம் கூட கூறவில்லை" என தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


மரண அறிவித்தல் அமரர் நன்னித்தம்பி முத்துப்பிள்ளை (பாலம்மா )

துயர் பகிர்வு-தோற்றம் -08-06-1933--மறைவு-28-06-2026
யாழ். தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது 
கனடா (Ontario )ஒன்றாரி ஓவில் வசித்துவந்த 
 /அமரர்  நன்னித்தம்பி முத்துப்பிள்ளை (பாலம்மா ) அவர்கள்
28-06-2026-ஞாயிற்று கிழமை  அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்  காலம்சென்ற நன்னித்தம்பியின் அன்பு 
மனைவியும் மற்றும் பாத்மமார்  (மலர் )காலம்சென்ற ஜெயசீலன்  தயாசீலன் (சீலன் ) மற்றும் சாந்தநாயகி(சாந்தி )
ஆகியோரின்அன்புத்தாயாரும்  ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/



திங்கள், 29 ஜூன், 2026

நாட்டில் கென்டக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நால்வர் மரணம்

.நாட்டில் கென்டக்கி முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தது நான்கு பேர் 
இறந்துள்ளனர்.
இந்நிலையில், அவசரகால குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு சேதத்தை மதிப்பிடுவதற்கும் கூட்டாட்சி பேரிடர் உதவியைப் பெறுவதற்கும் பணிபுரிந்த் 
வருகின்றனர்.
"நாங்கள் இன்னும் தேடுதல் மற்றும் மீட்பு கட்டத்தில் இருக்கும்போது, ​​கூட்டாட்சி உதவிக்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக சேதத்தை ஆய்வு செய்ய நாங்கள் விரைவாகச் செயல்படுகிறோம்" என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கென்டக்கி கவர்னர் அவசரகால நிலையை அறிவித்தார் மற்றும் இருட்டிற்குப் பிறகு சாலைகளில் இருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தினார்..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 28 ஜூன், 2026

அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்-23-03-1959---விண்ணில்-14-07- -2022 
திதி -28-06-2026.இன்று 
முல்லைத்தீவு துணுக்காயைப்  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் புத்தூர் மற்றும் நவற்கிரியை
 வாழ்விடமாகவும் தற்போது சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen)  மாநிலத்தில் வசித்துவந்த அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )அவர்களின்  நான்காம் ஆண்டு ..நினைவஞ்சலி  திதி -28-06-2026-இன்று  அவரது இல்லத்தில் நடைபெறும் அன்னார் திரு குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ராசா றயித்தா பிரபா ஆகியோரின் அன்புத்தாயாரும் 
 காலஞ்சென்ற வீரகத்தி  மற்றும் நாகம்மா தம்பதியினரின் 
பாசமிகு மருமகளும் ஆவர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!

https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_28.html

 இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி 
சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen) 

சனி, 27 ஜூன், 2026

திரைக்கதை மன்னன்' கே.பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்



பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் .27-06-2026.இன்று  காலமானார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
அண்மையில் காலமான புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின், உதவி இயக்குநராக ஆரம்பத்தில் பாக்யராஜ் பணியாற்றினார். பின்னர் 1979-ம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பிறகு இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார். நகைச்சுவை, குடும்ப உணர்வு, சமூகக் கருத்துகள் ஆகியவற்றை அழகாக இணைத்து திரைப்படங்களை உருவாக்கியவர்.
இவரது திரைக்கதைகளில் எதிர்பாராத திருப்பங்களும் இயல்பான உரையாடல்களும் முக்கிய அம்சங்களாகும். இயக்குநர் கே. பாக்யராஜ் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை, குடும்பக் கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் இன்று வரை ரசிகர்களால்  கொண்டாடப்படுகிறது. 
அவருக்கு திரைத்துறையினர் மற்றும் இரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






வெப்ப அலை காரணமாக பிரான்சில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு

வெப்ப அலை காரணமாக பிரான்சில்  உயிரிழந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக பதிவாகியுள்ளது.
ஐரோப்பாவைத் தாக்கி வரும் கடும் வெப்பம் கிழக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 35°C (95°F) வெப்பநிலையில் 15 கோடி மக்கள் மூச்சுத்திணறி வருகின்றனர்.
இந்த வெப்ப அலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையானதாகவும் பரவலானதாகவும் உள்ளது என்றும், இப்பகுதியின் 850 பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் முன்னெப்போதும் இல்லாத வெப்ப அழுத்தத்துடன் போராடி வருவதாகவும் விஞ்ஞானிகள்
 தெரிவித்தனர். 
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காலநிலை நெருக்கடியே இந்த அதீத வெப்பநிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 26 ஜூன், 2026

அமரர் பாலசுந்தரம் பூபாக்கியட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில் 21-01-1948--விண்ணில் -08-07-2025- 
திதி -27-06-2026.இன்று 
 யாழ் ஓட்டுமடத்தை  பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வசித்துவரும் தற்போது ஓட்டுமடத்தை   வசித்து வந்த   
( 08-07-2025-அன்று சிவபதமடைந்த) அமரர் பாலசுந்தரம் பூபாக்கியட்சுமி  அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 
திதி -27-06-2026.அன்று ஓட்டுமடத்தில் அவரது இல்லத்தில் நடைபெறும் 
அன்னார் காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியரும் 
திரு சீலன் (டென்மார்)திருமதி சொரூபி (லண்டன் )திரு பாலமுரளி (நோர்வே ) திருமதி சுதா (டென்மார்)
ஆகியோரின் அன்புத்  தாயாரும் ஆவார் 
27-06-2026-,சனிக்கிழமை  கிழமை அன்று  பிற்பகல்,11,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில்  அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!

https://navakkiri.blogspot.com/

 இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி
 -ஓட்டுமடம் 
யாழ்பாணம்.


வியாழன், 25 ஜூன், 2026

மரண அறிவித்தல் அமரர் நல்லையா கமலாதேவி(தேவிஅக்கா)

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-24-06-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் நல்லையா கமலாதேவி(தேவிஅக்கா)அவர்கள் நவற்கிரியில் காலமானார்  அன்னார்  காலம்சென்ற
வல்லிபுரம்  தம்பதியினரின் பாசமிகு மககளும்  காலம்சென்ற அன்னலக்சுமி  காலம்சென்ற பரராஜசிங்கம்  காலம்சென்ற திருநாவுக்கரசு மற்றும் விசாலாட் சி   (தங்கராணி)  தங்கவேலு 
ஆகியோரின் அன்பு  சகோதரியும் விஜயலட்சுமி(விஜயாஇலங்கை.) பாஸ்கரன்  இலங்கை)  விஜயராணி(ராணி (பிரான்ஸ்  ) 
விஸ்ணுகுமார் (பிரான்ஸ் )  விஸ்னராஜா( இலங்கை) ஆகியோரின்அன்புத்தாயாரும்  
 ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  26-06-2026- வெள்ளிக்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
 26-06-2026.. வெள்ளிக்கிழமை அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் 
குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு  
  மகள் விஜயராணி(ராணி)
+33 7 69 25 94 22
+33664324453 பேரன் . சுமன் 

17 boulevard Camille saint sans 
77185 logne

https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_25.html


புதன், 24 ஜூன், 2026

நாட்டில் .லாவோஸில் குகைக்குள் சிக்கிய நபர் பத்து நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

நாட்டில் லாவோஸில் வெள்ளப்பெருக்கால் குகைக்குள் சிக்கியிருந்த கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து 
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக குகைக்குள் சிக்கியிருந்தவர்களில் இரண்டாவது உயிர் பிழைத்த நபர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார்.
மிகவும் ஆபத்தான மற்றும் சவாலான சூழ்நிலையில் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையில், குகையின் குறுகிய மற்றும் வெள்ளநீர் நிரம்பிய வழித்தடங்களை கடந்து மீட்புப் பணியாளர்கள் அவரை வெளியே 
கொண்டு வந்தனர்.
குகைக்குள் சிக்கியிருந்த பலர் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, காணாமல் போன மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நெகிழ்ச்சியான மீட்புக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 23 ஜூன், 2026

நாட்டில் கொக்குவில் மற்றும் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் பலி

நாட்டில் கொக்குவில் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தனித்தனியாக நடந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். 
கொக்குவில்–பானிச்சியாடி சாலையில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களின் சாரதி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் 
உறுதிப்படுத்தியுள்ளனர். 
இந்த விபத்து குறித்து கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 
இதேவேளை கிளிநொச்சி நகரில் உள்ள வட மாகாண விளையாட்டு வளாகத்திற்கு அருகே ஏ9 சாலையில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் விபத்து பதிவாகியுள்ளது. 
யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாலையைக் கடந்து சென்ற பாதசாரி மீது மோதியதாக 
தெரிவிக்கப்படுகிறது. 
பாதசாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்தவர் ஆகியோர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதசாரதி உயிரிழந்துள்ளார். 
62 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 22 ஜூன், 2026

நாட்டில் மன்னார் பாலத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது: ராணுவ வீரர் மரணம்

நாட்டில் மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள ராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரரொருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இன்று (22) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த ராணுவ வீரர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் சவுத் பார் ராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கோப்ரல் ஜெயத்திலக வயது 46 என்னும் ராணுவ வீரரே குறித்த வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது மன்னார் பிரதான பாலத்துக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் அவர் கடமையில் இருந்ததாகவும் குறித்த சோதனை சாவடியில் கடமையில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு அவரே துப்பாக்கிகளை வழங்கி வந்ததாகவும்.
அவ்வாறு வழங்க முற்படும்போது பெட்டிக்குள் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையே விபத்திற்கு காரணம் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிழந்த ராணுவ வீரரின் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கேகாலையில் ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து பெண் ஒருவர் பலி

நாட்டில் கேகாலையில் 07 வாகனங்கள் மோதி பாரிய விபத்து
 ஏற்பட்டுள்ளது. 
,மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காமயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
சாரதி பயிற்சிப் பாடசாலைக்குச் சொந்தமான பல வாகனங்களே இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 21 ஜூன், 2026

இருபது மாத குழந்தை ஜெர்மனியில் மரணம் இலங்கைத் தமிழ் தாய் கைது

ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல்
 .உயிரிழந்துள்ளது.
இது தொடர்பாக அக்குழந்தையின் 44 வயதுடைய இலங்கைத் தமிழ் தாய் காவல் துறையினரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் 
புறப்பட்டுள்ளார். 
ஆனால், வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக, குழந்தையைக் காப்பகத்தில் இறக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு, அவர் நேராகத் தனது வேலைத்தலத்திற்குச் சென்று காரை நிறுத்திவிட்டுச் 
சென்றுள்ளார்.
பின்னர், குழந்தையைக் காப்பகத்திலிருந்து மீண்டும் அழைத்து வருவதற்காகக் காரின் அருகே வந்தபோதுதான், குழந்தை காரின் பின் இருக்கையிலேயே இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்பகுதியில் நிலவிய கடுமையான வெயில் காரணமாக, நீண்ட நேரம் மூடியிருந்த காருக்குள் ஏற்பட்ட அதிகப்படியான வெப்பத்தினால் மூச்சுத் திணறி குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.

சனி, 20 ஜூன், 2026

தொடருந்துகள் இங்கிலாந்தில் ஒன்றுடன் ஒன்று மோதில் பலர் :காயம் ஓட்டுநர் பலி

இரண்டு தொடருந்துகள்   லண்டனுக்கு வடக்கே  ஒன்றுடன் ஒன்று மோதியதில் தொடருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 99 பேர் 
காயமடைந்தனர். 19-06-2026-
வெள்ளிக்கிழமை பிற்பகல் பெட்ஃபோர்டுக்கு தெற்கே ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் தொடருந்து சேவையால் இயக்கப்படும் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர் என்று
 காவல்துறை தெரிவித்தது. தீயணைப்பு வீரர்களும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 

வெள்ளி, 19 ஜூன், 2026

நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தால் வைத்தியசாலைகள் : நெருக்கடி நிலை

நாட்டில்  டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலைகளால் சமாளிப்பது கடினமாக இருக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதித்த
 தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
வீடுகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதார அமைப்பின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர்
 சுட்டிக்காட்டினார்.
பேருவளை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, "நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்தாலும், டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே குறுகிய கால தீர்வு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிப்பதே ஆகும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதுதான். இதைவிட அதிகமான நோயாளிகள் பதிவாகத் தொடங்கினால், நமது வைத்தியசாலைகளால் அதைச்
 சமாளிக்க முடியாது. 
இது போன்ற ஒரு பிரச்சினை தொடர்ந்தால் இதுதான் நடக்கும். அப்படி நடந்தால், நோயாளி பராமரிப்பு சீர்குலைந்துவிடும். இதை இன்னும் கட்டுப்படுத்த முடியும்." என்றார்..என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


வியாழன், 18 ஜூன், 2026

நாட்டில் காதலியின் சடலத்தை காரில் கைவிட்டுச் சென்ற காதலன் பொலிஸார் விசாரணையில்

இலங்கை தெல்தெனிய பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் பொலிஸார் தீவர விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த சடலம்  பெண் உடற்பயிற்சி நிபுணருக்கு சொந்தமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  குறித்த பெண்ணின் காதலன் சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
பொலிஸாரின் தொடர் விசாரணைகளில் குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராகப் பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. 
 அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். அ
தன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. 
 இதேவேளை, தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு அவரது சடலம் குறித்துத் தகவல் வழங்கியவர், உயிரிழந்த பெண்ணின் காதலன் என 
சந்தேகிக்கப்படும் நபரே என்பதும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. 
 எவ்வாறாயினும், அந்த நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிப்பதற்காக நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை
 மேற்கொண்டு வருகின்றனர். 
 நீதவான் விசாரணைக்குப் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு படுகொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 17 ஜூன், 2026

கொடூர விபத்து யாழ் - கண்டி வீதியில் பாரவூர்திகள் மோதி இருவர் பரிதாப பலி

.யாழ் கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 16 ஜூன், 2026

நாட்டில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு- பொலிஸ் காயம்

கொழும்பு- ப்ளூமெண்டல் காவல் நிலையத்தில், சார்ஜன்ட் ஒருவரின் வசம் இருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக இயங்கியதில், பொலிசார் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ப்ளூமெண்டல் பொலிஸார் தெரிவித்தனர். உதவிச் சேவைக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
.தமது கடமைக்கான துப்பாக்கியைப் பொறுப்பேற்று அதனைப் பரிசோதிக்கும்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி இயங்கியுள்ளது. இதன்போது அதிலிருந்து ஒரு ரவை வெளியேறி, தரைத்தளத்தில் உள்ள டைல்ஸ் (Tiles) மீது பட்டு, அதன் சிதறல் துண்டு
 உதவிச் சேவையில் ஈடுபட்டிருந்த காவலரின் இடது கால் கணுக்காலுக்கு சற்று மேலே பாய்ந்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





திங்கள், 15 ஜூன், 2026

நாட்டில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

நாட்டில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியதில் ஏறக்குறைய 18 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த விபத்து இன்று கண்டி - யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேனின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 தனியார் பேருந்து கண்டி திசை நோக்கியும், பாடசாலை வேன் அதற்கு எதிர் திசையிலும் பயணித்துக்கொண்டிருந்த போதே
  விபத்து நேர்ந்துள்ளது. 
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 14 ஜூன், 2026

மரணஅறிவித்தல் அமரர் ஜெயக்குமார் நெல்சன்

 துயர் பகிர்வு-தோற்றம் -00--மறைவு-13-06-2026.
யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  அமரர் ஜெயக்குமார்  நெல்சன் அவர்கள்  13.06.2026 சனிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஜெயக்குமார்,  பத்மராணி (பழைய மாணவி, ஓய்வு பெற்ற ப. நோ. கூ. சங்க லிகிதர் மற்றும் தற்போதைய சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்)  ஆகியோரின் அன்பு மகனும்,
ஜெனனியின் (பழைய மாணவி)அன்பு சகோதரனும், ஜெகதீபன் (யாழ் போதனா வைத்தியசாலை பரிசாரகர்) அவர்களின் மைத்துனரும், ஜெனிலியா, ஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு மாமனுவார். 
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.06.2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 1 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று  பின்னர் ஆவரங்கால் இந்துமயாணத்தில் நல்லடக்கம் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு 
பத்மராணி (தாய்) - 0774109600
ஜனா (சகோதரி) - 0772850444
ஜெகன் (மைத்துனர்) - 0779170257
தகவல்
குடும்பத்தினர்.
https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_338.html





                     
 

சாலை விபத்தில் கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் மரணம்

 சாலை விபத்தில் கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் மேப்லெட்டன் நகரில் நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிச்சனர் நகருக்கு வடக்கே உள்ள கோனெஸ்டோகோ ஏரிக்கு அருகில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஒரு எஸ்.யூ.வி ரக காரும், ஒரு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
விபத்துக்குள்ளான வேனில் 10 பேரும், எஸ்.யூ.வி காரில் ஒருவரும் இருந்துள்ளனர். வேனில் இருந்தவர்களில் 4, 6, 8, 10 மற்றும் 12 வயதுடைய ஐந்து சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
இதில் படுகாயமடைந்த நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 13 ஜூன், 2026

காணாமல் போன சிறுவன் யாழில் கிணற்றில் சடலமாக மீட்பு

நாட்டில்  பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில்  காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
புலோலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன்-12-06-2026- நேற்று இரவு திடீரென காணாமல் போயுள்ளார். சிறுவன் காணாமல் போனது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்தத் தீவிரத் தேடுதலின் பலனாக, இன்று வீட்டின் அருகில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து 
பருத்தித்துறை பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 12 ஜூன், 2026

ஏற்பட்ட கார் விபத்தில் கனடாவில் இளைஞர் உட்பட இருவர் மரணம்

. கனடாவின் கியூபெக் மாகாணத்தில், போலீஸார் துரத்திச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் காரில் இருந்த இருவர் உயிரிழந்தனர். அந்த காரின் உரிமையாளர் நன்னடத்தை
 உத்தரவை
 மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் போலீஸார் அந்த காரை மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால், காரை ஓட்டிச் சென்றவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக காரைச்
 செலுத்தியுள்ளார். 
பொலிஸார் காரைத் துரத்தத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மாண்ட்ரியல் நகருக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டோ-டு-லாக் பகுதி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த டெலிஸ்லே ஆற்றுக்குள் விழுந்துள்ளது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் 
ஆற்றில் மூழ்கிய
 காரில் இருந்து கடுமையான காயங்களுடன் இருவரை மீட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். காவல்துறை தகவலின்படி, காரை ஓட்டியவர் 18 வயது இளைஞர் என்றும், அவருடன் பயணித்த மற்றொரு நபரின் வயது மற்றும் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது  

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html