பொதுவாக பல ஆண்கள் முகத்தை சீர் செய்யும் போது புருவத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
முக அலங்காரம் மற்றும் முக பராமரிப்பு என்று வந்தால், ஆண்கள் புருவத்தை கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை.
அதற்கு காரணம் நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்கள் தங்களின் நேரத்தை சலூனில் செலவிட விரும்புவதில்லை. சொல்லப்போனால், புருவ பராமரிப்பு என்பதை மெட்ரோ செக்ஷுவல் வகை ஆடவர் மட்டுமே விரும்புவார்கள்.
அப்படிப்பட்ட ஆண்கள் ஆடை அலங்காரம், மேக்-கப் மற்றும் முக பராமரிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள். முக வசீகரத்தை கொண்டு பிறரை ஈர்க்க வேண்டுமென்றால், அதற்கு புருவங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கண்டிப்பாக புருவ பராமரிப்புக்கான காரணங்கள் ஆண்களிடமும், பெண்களிடமும் வேறுபடுகிறது. ஆண்களை பொறுத்த வரை புருவ பராமரிப்பு என்பது இயற்கை அழகை தக்க வைக்கவும், சீராக இல்லாத ரோமத்தை நீக்குவதற்கு மட்டுமே.
இது சற்று குழப்பமாக இருந்தாலும், கீழ்கூறிய செய்யக்கூடியவையையும் செய்யக்கூடாதவையையும் படித்தால், புருவ பராமரிப்பைப் பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ளலாம்.
* ரேசரை பயன்படுத்தி புருவத்தை பராமரிக்க கண்டிப்பாக பரிந்துரைக்க மாட்டோம். அதனை பயன்படுத்தினால், அதன் விளைவு விபரீதமாக கொண்டு போய் முடியும்.
* ரேசரை வைத்து புருவத்தை ட்ரிம் செய்யும் போது, அதிகமாக எடுத்து விட வாய்ப்பு உள்ளது. அதனால் தாடியை போல புருவம் அதிகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் அபாயம் உள்ளது.
இது போக சீரான திசையில் அதன் வளர்ச்சி இருக்காது. இதனால் அது அழகை பாதிப்பதோடு மட்டுமல்லாது, வெட்டுக்காயங்களையும் ஏற்படுத்தும்.
* பொறுமை இல்லாத சமயம் புருவத்தை பராமரிக்கும் போது, அதிக அளவில் புருவத்தை எடுத்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே நேரத்தை எடுத்துக் கொண்டு, பொறுமையாக ஒவ்வொரு முடியாக உருவ வேண்டும்.
* நடுவில் எப்படி இருக்கிறது என்று பார்க்காமல் அவசரம் அவசரமாக முடியை நீக்கிக் கொண்டே போனாலும், அளவுக்கு அதிகமான முடியை நீக்க வாய்ப்பு உள்ளது. ஒரு முறை போனால் போனது தானே. அதனால் பொறுமையுடன் செயல்பட்டு, சங்கடத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்.
* நீளமான முடிகளை புடுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. காடுகளை போன்ற தோற்றத்தை தடுக்க, அவைகளை ட்ரிம் செய்தால் மட்டுமே போதுமானது. அதிலும் புருவத்தை மேல்நோக்கி சீவினால், அது நீளமான முடியை காட்டிவிடும்.
* மேலும் சிறிய சீப்பை பயன்படுத்த வேண்டும் அல்லது புருவங்களை மேல்நோக்கி தேய்த்தால், அவைகள் ஒரே திசையை நோக்கி இருக்கும். புருவத்தை ட்ரிம் செய்ய சிறிய கத்தரிகோலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் கண்டிப்பாக ட்ரிம் செய்ய வேண்டும்.
* புருவ ரோமங்களை புடுங்குவதற்கு முன் அல்லது வேக்சிங் செய்வதற்கு முன், அந்த இடத்தை சுத்தமாகவும் அழுக்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மேலும் அவ்விடத்தில் எண்ணெயையும் தேய்த்துக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சுத்தமாகவும், துவாரங்கள் திறந்தும் ரோமங்கள் மென்மையாகவும் இருக்கும். அதனால் ரோமங்களை புடுங்கும் போது வலி இல்லாமல் இருக்கும்.
* ரோமங்களை புடுங்கவும், வேக்சிங் செய்யவும் நல்ல தரமுள்ள கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தாமல், மலிவான பொருட்களை பயன்படுத்தினால் விளைவு மோசமாக இருக்கும்.
* மேலும் ரோமங்கள் சீராக வளராமல் போகலாம். அதனால் நல்ல படியாக புருவங்களை பராமரிக்க, நல்ல பொருட்களில் முதலீடு செய்ய வேண்டும்.
* புருவங்களுக்கு மத்தியில் வளரும் முடிகள் ஒரு போதும் நாகரீகமாக இருந்ததில்லை, இருக்க போவதுமில்லை. மேலும் அது ஈர்க்கும் வண்ணம் இருப்பதில்லை.
அதனால் அதை உடனே நீக்குங்கள். அருகில் இருக்கும் சலூனுக்கு சென்று முதலில் அதை த்ரெட்டிங் மூலமாக நீக்குங்கள். இப்படி வளரும் முடியை வைத்திருப்பதை விட, அதனை நீக்க த்ரெட்டிங் செய்வது ஒன்றும் பெரிய அவமானம் கிடையாது.
* மூக்கின் மேல் முடிகள் உள்ள ஆண்களை எந்த பெண்ணும் வலை வீசி தேடுவது கிடையாது. இதனை நீங்களே நீக்க வேண்டும் என்று எண்ணினால், வேக்சிங் அல்லது புடுங்குதல் மூலம் செய்யுங்கள்.
* மாறாக ஷேவ் செய்யாதீர்கள். பெண்கள் மட்டும் தான் புருவங்களை பராமரிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அதனை உடைத்தெறியுங்கள். மேற்கூறிய செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை மனதில் வைத்துக் கொண்டு, புருவ பராமரிப்பில் ஈடுபடுங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக