விருதுநகரில் தேநீர்க் கடை ஒன்றில் வெங்காயத்துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோசாவை விற்பனை செய்துள்ளார் கடைக்காரர். இதனை வாங்கி சாப்பிட்டவர் அதிர்ச்சியில் மயங்கியே
விழுந்துவிட்டார்.
விருதுநகரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சிலர், அங்குள்ள ஒரு கடையில் சாப்பிட்டுள்ளனர். அப்போது ஓணானுடன் இருந்த சமோசாவை சாப்பிட்ட பணியாளர் ஜெயக்கனி என்பவர் மயங்கி விழுந்தார். இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டதை
அடுத்து, அவர் ஸ்தலத்துக்கு விரைந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சமோசாக்களை பறிமுதல் செய்து அழித்துள்ளார். மேலும், அருகிலிருந்த கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சமோசாக்களையும் கைப்பற்றி அழித்துள்ளார். சமோசாவில் ஓணான் இருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக