யாழ்ப்பாணம் – அச்சுவேலி பனை தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாகச் சீவல் தொழிலாளர்கள் 25 பேருக்கு 500 ரூபா பெறுமதியான 10 முட்டிகள் வழங்கப்பட்டுள்ளன என பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கே.வரதராஜன்
தெரிவித்தார்.
பனங்கட்டி உற்பத்தியை உக்குவிக்கும் முகமாக அங்கத்தவர் 25 பேருக்கு முதற்கட்டமாக இவை வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கூடுதலான பனங்கட்டியை உற்பத்தி செய்யும் நோக்கோடு சீவல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும் இந்த உதவிகள்
வழங்கப்பட்டுள்ளன.
மார்ச் மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் பனங்கள் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பருவ காலமாகும். இந்தக் காலத்தில் பனங்கட்டித் தொழில் மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலை
காணப்படுகின்றது.
அதையடுத்து சீவல் தொழிலாளர்களுக்கு சுண்ணாம்பு, சீவல் உபகரணங்கள் என்பன வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக