siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 3 மார்ச், 2016

நீங்கள் இளமையுடன் இருக்க சர்க்கரை வள்ளி கிழங்கு?.

ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். ஏன்என்றால் அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகள் அந்தந்த சீதோஷண நிலையோடு தொடர்புடையது. அந்த சீதோஷண நிலைக்கு தேவைப்படும் சக்தியை அந்த உணவு நமது உடலுக்கு தரும்.
இப்போது பனிக்காலம். பனிக்காலத்தில் நம் உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். அதற்கு தக்கப்படி உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு ஏற்ற காய், கனி, கிழங்கு வகைகளை இயற்கை நமக்கு தருகிறது. இந்த வகையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகம் கிடைக்கக்கூடிய சர்க்கரை வள்ளி கிழங்கு உடலுக்கு ஊட்டம் தரும் சிறந்த உணவாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இதில் உள்ள சர்க்கரை சத்து மிகவும் தரமானது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக நிதானமாகவே அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இதை சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள செல்களுக்கும் புத்துணர்ச்சியை 
கொடுக்கும்.
அதனால் இது இளமையை பாதுகாக்கும் உணவாக திகழ்கிறது. இதில் இருக்கும் மாக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ரத்த குழாய்களில் நன்கு சுருங்கி விரிய உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் இதனை சாப்பிடலாம். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் அந்தோசையனின் என்ற நிறமிகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து செல்களை பாதுகாப்பதால் புற்றுநோய் தாக்குதல் 
தடுக்கப்படுகிறது.
கண்பார்வை கூர்மையாக்கும். இதனை சாப்பிட்ட உடன் பசி அடங்கிய நிறைவு ஏற்படும். அடுத்து நீண்ட நேரம் பசி எடுக்காது. அதனால் விரத காலங்களில் சர்க்கரை வள்ளி கிழங்கு சார்ந்த உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்த கிழங்கின் மாவும் சிறந்த உணவுப்பொருள்தான். அதில் பல விதமான பிஸ்கெட், கேக், ரொட்டிகள் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவும் தயாராகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக