இலங்கையின் சகல பாகங்களிலும் டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட அவர்,
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நாடு முழுவதிலும் 12,360 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். ஜனவரியில் 6541 பேரும், பெப்ரவரியில் 4,220 பேரும், மார்ச்சில் 1,600 பேரும் இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாதங்களிலும் இந்நோய்க்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை கடந்த 2014இல் 47 ஆயிரம் நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் 96 பேர் மரணமடைந்தனர். கடந்த வருடத்தில் 29,770 நோயாளிகள் இனம் காணப்பட்டனர். அவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.
இந்நிலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அரசு இதுவரை
ஒரு பில்லியன்
ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. இவ்வருடத்தில் இந்த நோயை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 29 தொடக்கம் ஏப்ரல் 4 வரை டெங்கு குடம்பிகளை அழிப்பதற்கான தேசிய மட்டத்திலான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையில் சுகாதார சேவை அமைச்சு அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் போன்றவை பங்கேற்கும் என்று
தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக