siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 17 நவம்பர், 2024

யாழில் ஆடு திருடிச் சென்ற இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது

மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றிலிருந்து ஆடு திருடிச் சென்ற இருவர் வட்டுக்கோட்டை 
பொலிஸாரால் 16-11-2024.அன்று கைது 
செய்யப்பட்டனர்.
தமது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடொன்று களவாடப்பட்டுள்ளதாக ஆட்டின் உரிமையாளர் 15-11-2024. வெள்ளிக்கிழமை அன்றுவட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 
செய்துள்ளார்.
இந்நிலையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், மூளாய் தண்ணீர் தொட்டியடி பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை 15-11-2024.அன்று 
கைது செய்தனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது-






 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக