siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 28 மார்ச், 2018

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

நாளை மறுதினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி  அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இந்நிலையில் இம்மாணவர்களில் 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு  தெரிவித்துள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>...

சனி, 24 மார்ச், 2018

இலங்கைத் தமிழ் யுவதி ரம்யா இந்தியாவில் பலி

தமிழ்நாடு - பெரம்பலூர் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போன இலங்கைப் பெண் ஒருவர் சென்னையில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் அடிப்படையில் பல உண்மைகள் அம்லமாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ரம்யா என்ற 24 வயதான குறித்தப் பெண் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் காணாமல் போய் இருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை(20) டெல்லியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில்  உயிரிழந்தார். விபத்தை...

வியாழன், 22 மார்ச், 2018

திருமண நிகழ்வு நடைபெற்ற வீடில் குப்பிளான்னில் திருட்டு

யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்ற வீடொன்றில் திங்கட்கிழமை(19) இரவு விசித்திரத் திருட்டு இடம்பெற்றுள்ளது. குப்பிளான் பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும், பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மணமகளுக்கும் பெரியோர்கள் திருமணம்  நிச்சயித்திருந்த நிலையில் திங்கடகிழமை முற்பகல் சுபவேளையில் சுழிபுரத்திலுள்ள ஆலய மண்டபமொன்றில் திருமண நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. குறித்த திருமண நிகழ்வு பெருமளவானோர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற நிலையில்...

புதன், 21 மார்ச், 2018

ஆணின் சடலம் யாழ் வடமராட்சி கடற்கரையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மத்திய வயதுடைய ஆண் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அண்மையில் நயாரு பிரதேசத்தில் கடலுக்கு சென்ற 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளமையினால் குறித்த மீனவர்களில்...

செவ்வாய், 20 மார்ச், 2018

அமரர் திரு கந்தையா. சுப்பிரமணியம். 7ம் ஆண்டு நினைவஞ்சலி..20.03.18

மண்ணில் : 06- பெப்ரவரி  1932 — விண்ணில் : 06 ஏப்ரல்  2011 திதி : 20 மார்ச்.2018.இன்று  யாழ். மாவிடடபுரத்தை  பிறப்பிடமாகவும், நவற்கிரி  புத்தூரை  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த.அமரர்  திரு .(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம்.மணி அண்ணர்.மணிஐயா ) அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி. ஏழாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!! எம்மை விட்டேகி ஏழாண்டு போனதையா!  ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!  தாங்கியே...

சனி, 17 மார்ச், 2018

இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுப்பிட்டிப் பகுதியில் ஒருவர் பலி

யாழ். சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில்(16-03-2018) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து இரவு சுமார் 8.45 மணியளவில் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் எதிரே சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதியதால்...

புதுக்குடியிருப்பில் இளம் பெண் தூக்கில் தொங்கி மரணம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்.16.03.2018. நேற்றுப் பிற்பகல் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புதுகுடியிருப்பு 10ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பை சேர்ந்த 24 வயதுடைய கபிதரன் துர்க்கா என்னும் இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார்...

யாழில் பாடசாலையில் விழுந்த மாணவன் ஸ்தலத்திலேயே மரணம்!!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலையில் தடுக்கி விழுந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இச் சம்பவத்தில் சுளிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் சுளிபுரம் மத்தி சுளிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் கரிகரன் எனும் 8 வயது பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவர். குறித்த சிறுவன் நேற்றைய தினம் பாடசாலைக்கு சென்ற போது அங்கு...

மூன்று நாட்களாக அநாதரவாக வீதியில் நின்ற சிறுவன் பொலிஸாரால் மீட்பு!!

பெற்றோரால் வெறுக்கப்பட்ட சிறுவன் மூன்று தினங்களாக தம்புள்ளை பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், குறித்த சிறுவனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.12 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் பேருந்து நிலையத்தில் இருப்பதாக  தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்துச் சென்றுள்ளனர். தம்புள்ளை பேருந்து நிலையத்திற்கு பின்னால்...

மரண அறிவித்தல் திருமதி கதிர்காமநாதன் முத்தம்மா.16.03.18

பிறப்பு : 7 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 16 மார்ச் 2018 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வசிப்பிடமாகவும், நவக்கிரியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் முத்தம்மா அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை  அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிர்காமநாதன்(கிளியர்) அவர்களின் அன்பு மனைவியும், சிறிதரன்,...

வியாழன், 15 மார்ச், 2018

திருமதி பரமலிங்கம்.புஸ்பமலர் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 15.03.18

....உதிர்வு:15.03.2017   யாழ்  நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கனடாவை   வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி:பரமலிங்கம்.புஸ்பமலர்.  ....அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 15.03.2018.இன்று  எங்கள் வாழ்வில் ஒளியேற்றி  பிரகாசிக்க வந்துத்த அம்மாவே   என்றென்றும் நீர் எம்முடனே  வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம்  இடைநடுவில் எமைவிட்டு  இறைவனடி சென்றீரோ நாம் நிலைகுலைந்து நிற்கையிலே  வாழ்க்கைப்...

திங்கள், 12 மார்ச், 2018

சைக்கிளுடன் சேர்த்து கரவெட்டியில் ஆலய கேணியில் சடலம் மீட்ப்பு

ஆலயக் கேணி ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப்பொலிஸார் தெரிவித்தனர்.  வெள்ளிக்கிழமை காலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கரணவாய் கிழக்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பாலசுப்பிரமணியம் (வயது 56) எனப் பொலிஸார் கூறினர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதா வது, நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை மேற்படி குடும்பஸ்தர் மாடு அவிழ்ப்ப த ற்காக வயலுக்குச் சென்றவர் இரவாகியும்...

ஞாயிறு, 11 மார்ச், 2018

நாட்டில் பேஸ்புக், வட்ஸ் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டம்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்தஅரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார். இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்தவலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதைஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர்...

சின்னத்தம்பி (புளுவப்பா )அப்புவின் இறுதி நிகழ்வு(11/03/18)

நேற்று முன்தினம் மாலை உந்துருளியால் மோதப்பட்டு உயிரிழந்த "புளுவப்பா" என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி அப்புவின் இறுதி நிகழ்வு(11/03/2018) இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

சனி, 10 மார்ச், 2018

காரைநகர், அச்சுவேலி, செட்டிக்குளம் வாகன விபத்துக்களில் மூவர் பலி

காரைநகர், அச்சுவேலி, செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் காரைநகர் அம்மன் கோயில் வீதியில், அம்மன் கோயில் சந்தி பகுதியில் நேற்று மாலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது காரைநகர் பிரதேசத்தை...

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் விபத்து; நால்வர் படுகாயம்

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நாலவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற ஜா எல பிரதேசத்தை சேர்ந்த டொல்பின் ரக வாகனமும் மெனிக்பாம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுமே மெனிக்பாம் கல்லாறு பாலத்திற்கு அருகில் நேருக்க நெர் மோதிக்கொண்டதில் இவ் விபத்து  ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும்...

வியாழன், 8 மார்ச், 2018

சம்பவத்தில் உயிரிழந்ததெல்தெனிய இளைஞனின் குடும்பம் எதிர்நோக்கும் நிலை

தற்போது ஒட்டுமொத்த இலங்கையும் முகம்கொடுத்திருக்கும் பாரிய பிரச்சனைக்கு காரணமாக இருந்தது குமாரசிங்க என்ற அப்பாவி இளைஞனின் மரணம் தான்.கண்டியில் ஒரு சிங்கள இளைஞனை  முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் தாக்கியதில் அந்த இளைஞன் 10 நாட்களுக்குப்பின் உயிரிழந்திருந்தார்.அதையடுத்து  குறித்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில்  ஆரம்பித்த பிரச்சினை இன்று நாடளாவிய ரீதியில்  அவசரகால...

அமெரிக்கா பிரஜை ஒருவர் கிளிநொச்சியில் அடித்துக் கொலை

அமெரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவர் கிளிநொச்சியில் தாக்கப்பட்டு படுககொலை செய்யப்பட்டுள்ளார்.அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று இரவு குறித்த நபர்  தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சிபொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – கனகபுரம், செல்வாநகரை பிறப்பிடமாகக் கொண்ட 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க...

புதன், 7 மார்ச், 2018

பேஸ்புக், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை

வன்முறையின் உச்சம் இலங்கை பூராகவும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக், வட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் ஆகிய பிரான சமூக வலைத்தளங்கள்  உடன் அமுலுக்கு  வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வேகமாக தகவல் பரவி வருவதால் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சமூக வலைத்தளங்களை உடன் நிறுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. எனினும்...

இணைய சேவைகள் கண்டியில் துண்டிப்பு!

கண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள்  ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

சனி, 3 மார்ச், 2018

வயது முதிர்ந்தவர் யாழ் கொட்டடிப் பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலையே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த நபர் யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியிலுள்ள இரும்புக்கடை ஒன்றின் உரிமையாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது இரும்புக் கடையின் பின்புறமாகவே அன்னார் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...