காரைநகர், அச்சுவேலி, செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் காரைநகர் அம்மன் கோயில் வீதியில், அம்மன் கோயில் சந்தி பகுதியில் நேற்று மாலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான மகாலிங்கம் மாணிக்கம் என்ற நபர் காயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
உயிரிழந்துள்ளார்.
அதேவேளை அச்சுவேலி பொலிஸ் பிரிவின் நிலாவரை நாவகிரி பாடசாலைக்கு அருகில் வீதி கடவையில் சென்ற பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் காயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் இருந்த பாதசாரி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நாவகிரி - புத்தூர் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான சுதன் சின்னத்தம்பி என்ற முதியவரே சம்பவத்தில்
உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று மரண விசாரணைகள் நடைபெறவுள்ளன. அச்சுவேலி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக