தமிழ்நாடு - பெரம்பலூர் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போன இலங்கைப் பெண் ஒருவர் சென்னையில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் அடிப்படையில் பல உண்மைகள் அம்லமாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ரம்யா என்ற 24 வயதான குறித்தப் பெண் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் காணாமல் போய் இருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை(20) டெல்லியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில்
உயிரிழந்தார்.
விபத்தை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் படியே குறித்தப் பெண் பெரம்பலூர் முகாமைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போய் இருப்பதாக முறைப்பாடு பதிவாகி இருக்கின்றமையும் டெல்லி பொலிஸாருக்கு தெரியவந்தது.
இதற்கிடையே ரம்யா டெல்லிக்கு எதற்காக சென்றார்? என்பது குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.
ரம்யாவின் காதலன் இலங்கையில் இருந்து சட்ட விரோத படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
அவரை சந்திக்க ரம்யா முடிவு செய்து இதற்காக அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி சென்னை சென்றுள்ளார்.
அங்கு ஒரு முகவர் மூலம் தனது பெயரை ஸ்ரீமதி ஹமீரா என மாற்றி போலியாக கடவுச்சீட்டு எடுக்க முயற்சித்துள்ளார்.
பின்னர், டெல்லி சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லவும்
தயாராகி இருக்கிறார்.
இந்த நிலையில், டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த போதுதான் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக