அமெரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவர் கிளிநொச்சியில் தாக்கப்பட்டு படுககொலை செய்யப்பட்டுள்ளார்.அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று இரவு குறித்த நபர்
தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சிபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – கனகபுரம், செல்வாநகரை பிறப்பிடமாகக் கொண்ட 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெற்றவர் எனவும், அவரது பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அவரது காணியில் அமைந்துள்ள வீட்டினைப் பார்வையிட வருவதாகவும், அவ்வாறு வந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக