siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 மே, 2018

மன்னார் பொலிஸாரால் 29 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின்  ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.இதில், யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.யாழ்.கொழும்புத்துறை துண்டிப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை வேளையில்,...

புதன், 30 மே, 2018

கிளிநொச்சியில் மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!!

கிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து.29.05.2018.  பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் ரக வாகனமும் மோதியதில் இவ்விபத்து  இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற...

திங்கள், 21 மே, 2018

ஓர் அபாய எச்சரிக்கை!! மக்களுக்கு நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படும்

தற்போது மழையுடன் கூடிய காலநிலை காரணாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த மின்சார தடை, பொது மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு  தெரிவித்துள்ளார். தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்போது 10 நாட்கள் கடந்துள்ள போதிலும், பொறுப்பு கூற வேண்டியவர்கள் இன்னமும் உரிய பதில் வழங்கவில்லை...

நீராடச் சென்ற சிறுவன் மூங்கில் செடிகளுக்குள் சிக்கி பலி

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் மூங்கிலாற்றின் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டு மரணித்த நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றையதினம் (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற  இந்த சம்பத்தில் மண்டூர் கணேசபுரத்தைச் சேர்ந்த உமாபதி கிஷான் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.இந்தச் சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது………… சம்பவதினமான நேற்றையதினம் நண்பகல்...

ஞாயிறு, 20 மே, 2018

கோல் பேஸ் பகுதியில் 75 வயதுடைய குடும்பஸ்த்தர் தற்கொலை

காலி முகத்திடல் கடலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நேற்று மாலை குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பன்னிப்பிட்டி – ருக்மலே பிரதேசத்தினை சேர்ந்த 75 வயதுடைய நபரே  இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்தற்கொலைசெய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.புறக்கோட்டை பொலிசார் சம்பவம்...

டிப்பர் தடம்புரண்டு கோர விபத்து! ஒருவர் ஸ்தலத்தில் பலி

முல்லைத்தீவு,  முள்ளியவளை, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மற்றையவர்  மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

வியாழன், 17 மே, 2018

பலியான 02 வயது பச்சிளம் குழந்தைக்கு நடந்தது என்ன.

மாளிகாவத்தை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 02 வயது குழந்தையான மொஹமட் உஸ்மான் இகம், தட்டையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்திருப்பதாக  தெரியவந்துள்ளது.கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அந்த பரிசோதனையில் இந்த விடயம்  தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின்...

புதன், 16 மே, 2018

மரண அறிவித்தல்,திருமதி சிதம்பரப்பிள்ளை சின்னம்மா

பிறப்பு : 16 ஒக்ரோபர் 1930 — இறப்பு : 14 மே 2018 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா சிதம்பரப்பிள்ளை அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று இறையடி எய்தினார். அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு...

இணுவிலில் திடீர் தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி பலி!!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த 21 வயதான சீலன்  அஸ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நெருப்புத்  தணல் உள்ளது  என்று தெரியாது, அடுப்பில் விறகு வைத்து மண்ணெண்ணை ஊற்றிய போது தீப்பற்றி எரிந்ததில் குறித்த யுவதி காயமடைந்துள்ளார். இந்த அனர்த்தம் கடந்த ஆறாம் திகதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

ஞாயிறு, 6 மே, 2018

நாட்டில் யாழ் தேவி மிகச் சிறந்த தொடருந்துச் சேவைகளில்

உலகின் மிகச் சிறந்த தொடருந்துச் சேவைகளில் இலங்கையின் யாழ் தேவி தொடருந்துச் சேவையும் இடம்பெற்றுள்ளது. 18 தொடருந்து சேவைகள் பட்டியலிலே யாழ் தேவிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப் சேவைகள் பட்டியலை தி கார்டியன் இணையதளம் வெளியிட்டுள்ளது. தொடருந்துப் பயணத்தின் போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள்...

உடையார்கட்டில் விபத்து- முதியவர் உயிரிழப்பு

உடையார்கட்டுப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வேகமாக வந்த வாகனமொன்று மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் படுகாயமடைந்த முதியவர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திரபுரத்தைச்...

செவ்வாய், 1 மே, 2018

மனோகரா சந்திக்கு அருகில் வாகன விபத்தில் முச்சக்கர வண்டிசேதம்

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மனோகரா சந்திக்கு அருகில் இந்த விபத்த இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். பட்டா ரக வாகனம் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார்  தெரிவித்தனர் இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

உடோபிட்டியவில் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரங்கு

இலங்கையில் குரங்கு ஒன்றால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் எல்பிட்டிய, கெடன்தொல, உடோபிட்டிய பகுதியில் வாழும் மக்கள் குரங்கு ஒன்றால் அச்சமடை ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் சமீப கால்மாக இந்த பகுதிகளில் வாழும் குரங்கு ஒன்று மக்களை கடித்து வருவதாகவும், இதனால் 20 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் குரங்கு கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக வனவிலங்கு...

அரலகன்வல பகுதியில் மோட்டார் சைக்கிள் கோர விபத்து

திம்புலாகல – போகஸ்வெவ வீதியின் அரலகன்வல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 30.04.2018 மாலை மோட்டர் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன்  மோதியதிலேயே, குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் பாட்டி பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

வந்துராகல பகுதியில் கோர பஸ் விபத்து 25 பேர் படுகாயம்

குருநாகல், வந்துராகல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில் 25 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு,  காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே குருநாகல் பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும்,  குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று...