இலங்கையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 12-05-2021.இன்று இந்தகத் கருருத்தை வெளியிட்டார்.
இளையவர்களை விடவும் வயது முதிர்ந்தவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கோவிட் காரணமாக இளையோருக்கு ஆபத்து அதிகம் என பேசப்பட்ட போதிலும், உயிரிழப்பு குறித்த புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் அதிகளவான வயோதிபர்களே உயிரிழந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் முழு அளவில் பின்பற்ற வேண்டும் எனவும் வயோதிபர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியமற்ற வகையில் மக்கள் அதிகளவில் செறிந்துள்ள பகுதிகளுக்கான பயணங்களை தவிர்க்குமாறு
அவர் கோரியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக