கிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து.29.05.2018. பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் ரக வாகனமும் மோதியதில் இவ்விபத்து
இடம்பெற்றுள்ளது.
இதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இவருடைய சடலம் நீண்ட நேரத்திற்கு பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அளவுக்கு முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் செய்தியாளர்
குறிப்பிட்டார்.
இதேவேளை, டிப்பர் வாகனத்தை ஜீப் வாகனம் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனத்தின் பின்னால்
மோதியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக