மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் மூங்கிலாற்றின் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டு மரணித்த நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றையதினம் (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற
இந்த சம்பத்தில் மண்டூர் கணேசபுரத்தைச் சேர்ந்த உமாபதி கிஷான் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.இந்தச் சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது…………
சம்பவதினமான நேற்றையதினம் நண்பகல் தனது நண்பர்கள் சிலருடன் மூங்கிலாற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில், சிறுவனுடன் நீராடிக் கொண்டிருந்த ஏனைய சிறுவர்கள் இந்த விவரத்தை அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்குத்
தெரிவித்துள்ளனர்.
உடனடியாக கிராம மக்கள் ஆற்றுப் பகுதியெங்கும் தேடுதலை மேற்கொண்டநிலையில், காணாமல்போன சிறுவனின் சடலம் ஆற்றுக்கரைகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு உடற் கூறாய்வுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.பொலிஸார் சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக