மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் கோரிக்கைக்கு அமைய, நேற்றுமுன்தினம் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை விடவும், எரிபொருளுக்கான விலை மேலும் அதிகரித்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சருக்கு அனுப்பிய கடித்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மத்திய வங்கி ஆளுநரின் கடிதத்தின் பிரகாரம், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 35 ரூபாவாலும், ஒரு லீட்டர் டீசலின் விலையை 24 ரூபாவாலும், ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 11 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனினும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 20 ரூபாவாலும், ஒரு லீட்டர் டீசலின் விலையை 10 ரூபாவாலும், ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 10 ரூபாவாலும் நேற்றிரவு அதிகரிக்கப்பட்டிருந்தது.எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, அந்நிய செலாவணியை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தனது பரிந்துரையில் கூறியிருந்தார்.
இதற்கமைய – ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 15 ரூபாவாலும், ஒரு லீட்டர் டீசலின் விலையை 14 ரூபாவாலும், ஒரு லீட் டர் மண்ணெண்ணையின் விலையை 01 ரூபாவாலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக