siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 1 ஜூலை, 2022

பலாலியில் இருந்து இந்திய விமான பறப்புக்கு புதிய சிக்கல்

இந்தியாவிற்கும் – யாழ். பலாலிக்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமைக்கு இந்தியாவே காரணம் என கடற்றொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் 
சாட்டியுள்ளார்.
01-07-2022.இன்றைய தினம் காக்கை தீவில் புதிதாக அமைக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தியாவில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. விமானங்கள் இங்கு வந்துவிட்டு திரும்பி செல்வதற்கு எரிபொருள் இல்லை. அத்துடன் இந்தியாவில்
 இருக்கக்கூடிய சில சட்டச் சிக்கல்கள் காரணமாகவும் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசினை பொறுத்தவரை இந்த விமான சேவைக்கு தனது பூரணமான ஒத்துழைப்பினையும் அங்கீகாரத்தினையும்
 வழங்குகிறது.
இந்த சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட்டு இந்த விமான சேவைகள்
 தொடரும் என்றார்.
விமான சேவைகள் இன்று ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், எவ்வித செயற்பாடுகளும் அங்கு இடம்பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக