மாலர்வு-11,01,1944- .உதிர்வு-24.04.2019
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கொண்ட
அமரர் இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்) அவர்கள் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி
அன்னார் காலஞ்சென்ற அமரர் இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான
மாரிமுத்து தம்பதிகளின் புத்திரியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை,பாலா ,சிங்கம் மற்றும்
சின்னத்துரை, பேத்தச்சி பார்க்கியம் ஆகியோரின்
அன்புச்சகோதரியும்
வசந்தகுமார் மலர்வதான சுகந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும் ,
சரிதா கீர்த்தன் கீர்த்தி லவன்சி ஆகியோரின்அன்புப் பேத்தியம் ஆவார்
அந்திரட்டி வீட்டுகிருத்திய் அழைப்பிதழ்
.22-05-2019 புதன் கிழமை அன்று காலை 08,மணியளவில் கிரீமலை தித்தக்கரையில் ஆத்மா சாந்திப்பிரத்தனை நிகழ்வுகள் 24,05,2019, அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்,12,மணிஅளவில் அன்னாரின் இல்லத்தில் ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும்
மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
இங்கனம் -குடும்பத்தினர்
எமக்கு 7
ஆறுதல் கூறி உறுதுணையாக
இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும்
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே! குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
கடல் கடந்து எமைக்காண ஓடோடி வந்த எம் பூட்டியே! தரணியில் நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும்
பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்-
குடும்பத்தினர்
வீட்டுமுகவரி
எல்லாளன் வீதி
நவற்கிரி மேற்கு
புத்தூர்
செல்லிடப்பேசி: +0771179415
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக