யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 8:30 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .
துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.உயிரிழந்த வயோதிபரின்
உடல் கோப்பாய் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக